Connect with us

இலங்கை

முன்னோர்களின் ஆசி கிடைக்கும் ஆடி அமாவாசை; பாவங்கள் போக இப்படி வழிபடுங்கள்!

Published

on

Loading

முன்னோர்களின் ஆசி கிடைக்கும் ஆடி அமாவாசை; பாவங்கள் போக இப்படி வழிபடுங்கள்!

எல்லா மாதமுமே அமாவாசை வந்துபோனாலும் வருடத்தில் மூன்று அமாவாசைகள் இந்துக்கள் மத்தியில் முக்கியமானவையாக கருதப்படுகின்றது.

அவை , ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி அமாவாசை என்பனவாகும் .

Advertisement

ஆடிஅமாவாசை நாளில் இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு செய்வது நாம் செய்த பாங்களை போக்கும் என நம்பப்படுகின்றது.

ஆடி அமாவாசை என்பது முன்னோர்களை நினைத்து படையலிட்டு வணங்குவதற்கு உகந்த நாளாகும்.

பொதுவாக ஒரு வருடத்திற்கு 96 முறை முன்னோர்களுக்கு பித்ரு தர்ப்பணம் செய்யவேண்டும் என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

Advertisement

அப்படி செய்ய இயலாதவர்கள் ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய அமாவாசையில் செய்யலாம்.

அன்று பித்ருலோகத்திலிருந்து தேடி வரும் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்கவேண்டும் என்பதே சாஸ்திரம் சொல்ல கூடிய விதி ஆகும்.

ஆடி மாதத்தில் சூரியன் கடக ராசியில் சஞ்சரிக்கிறார்.

Advertisement

கடகம், சந்திரனின் ஆட்சிபெற்ற வீடு. சூரியன் சிவ அம்சம், ஆடி அமாவாசையின்போது சிவ அம்சமான சூரியன், சக்தி அம்சமான சந்திரனுடன் ஒன்று சேர்வதால் சந்திரனின் ஆட்சி பலமடைகிறது.

ஆகவேதான், ஆடி அமாவாசை வழிபாட்டுக்கு உகந்த நாளாக கூறப்பட்டுள்ளது.

ஆடி அமாவாசையன்று ஏற்படும் மாறுதல்களால் கடல்நீரில் ஓர் புதிய சக்தி ஏற்படுவதாகவும், அன்றைய தினம் புனித தலங்களில் உள்ள கடலில் நீராடுவது உடல்நலத்திற்கு வளம் தரும் என்றும் நம்பப்படுகிறது.

Advertisement

ஆகிய நாட்களில் திதி தர்ப்பணம் கொடுப்பது நல்ல பலனை தரும். தட்சிணாயன காலம் துவங்கி முதலில் வரக்கூடிய அமாவாசை, ஆடி அமாவாசையாகும். ஆகவே ஆடி அமாவாசை சிறப்பு பெறுகிறது.

குரு என்பவர் முன்னோர்களை குறிக்கும் கிரகமாகும். மேலும் புத்திர பாக்கியத்தை கொடுக்கும் கிரகமும் அவரே ஆவார். ஆகவே பித்ரு தர்ப்பணத்தை முறையாக மேற்கொண்டால் குடும்பத்தில் வாரிசுகளின் வாழ்க்கை சிறப்பாக அமையும்.

ஜோதிட ரீதியாக பார்த்தால் இருப்பதிலேயே “பித்ரு தோஷமே” தலையாய தோஷமாக கருதப்படுகிறது.

Advertisement

பித்ரு தர்ப்பணத்தை முறையாக செய்து குலதெய்வ வழிபாட்டை முறையாக செய்யும் ஒருவரை எந்த தோஷமும் பாதிப்பதில்லை என்பது நம்பிக்கை.

அமாவாசை தினத்தன்று மறைந்த முன்னோர்கள் காக்கை வடிவில் வந்து வழிபாட்டில் கலந்து கொள்கின்றனர் என்பது ஐதீகம்

எனவே தான் அமாவாசை நாட்களில் காகத்திற்கு உணவு வைப்பது வழக்கம்.

Advertisement

இது முன்னோர்களை வழிபடும் ஒரு முறையாகும்.

காகம், முன்னோர்களின் பிரதிநிதியாக கருதப்படுவதால், அமாவாசை அன்று காகத்திற்கு உணவு வைப்பதன் மூலம் அவர்களின் ஆசிகளைப் பெறலாம் என்பது நம்பிக்கை. 

எனவே முன்னோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும் ஆடி அமாவாசை முறையாக கடைப்பிடித்தாலே நம் கஸ்டங்கள் நீங்கி வளமான வாழ்வு பெறுவோம் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன