இலங்கை
யாழில் போதைப் பாவனையால் அதிகரிக்கும் தற்கொலைகள் மற்றும் கொலைகள்!

யாழில் போதைப் பாவனையால் அதிகரிக்கும் தற்கொலைகள் மற்றும் கொலைகள்!
சமூக ஊடங்களில் உங்கள் நட்பு பட்டியலில் இருக்கும் அதிகம் பழகியவர்களோ முகநூலில் மட்டுமே அறிமுகமான அல்லது வேறு யாராவது வெளிநாட்டிலோ உள் நாட்டிலோ இருக்கும் உங்களிடம் ஏதாவது மருத்துவ காரணங்கள் இல்லை அவசர தேவைகள் எண்டு சொல்லி அடிக்கடி பணம் கேட்டால் இல்லை மூவாயிரம் ஐந்தாயிரம் பத்தாயிரம் எண்டு கேட்டால் கொடுக்காதீர்கள்
ஏனைய நண்பர்களிடம் விசாரியுங்கள் சந்தேகம் கொள்ளுங்கள் கொஞ்சம் சிந்தியுங்கள் காரணம் ஏதோ ஒரு வகையில் ஒரு உயிரிழப்புக்கு சமுதாய அழிவுக்கு இல்லை ஒரு இளைஞனின் வாழ்க்கை அழிவுக்கு நீங்கள் காரணமாகின்றீகள்…
இவர்களை எப்படி மீட்பது இந்த கொடிய பேரழிவிலிருந்து என்பது மிகப்பெரிய சவால் மட்டுமல்ல அது சாதாரண செயலுமல்ல அவர்களாக அந்த பழக்கத்திலிருந்து விடுதலையாகும்வரை கடினம்.உண்மையில் அப்படியான நபர்களை கண்டுபுடிக்கவும் முடியாது அவர்கள் மிக நெருங்கிய வட்டாரங்களுக்கு மட்டுமே தெரியும் அவர்கள் நடவடிக்கை அவர்கள் தங்கள் உயிருக்கு மிக வேகமாக தினம் உலைவைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை.
வெளியிலிருந்து பார்க்கும் எம்மால் அவர்களை அடையாளம் காண முடியாது. ஒரு கட்டம் மேல் எந்த அளவுக்கும் அவர்கள் செல்வார்கள் போதைப் பாவனைக்கு தேவையான பணத்தை பெற்றுக் கொள்ள பொய் சொல்வது முதல் கொண்டு
அவர்கள் போதை வஸ்துகளுக்கு தேவையான பணத்தை பெற அவர்களுக்கான பிளாட்ஃபார்ம் இந்த சமூக ஊடகங்கள் தான் அதுவே அவர்கள் சுலபமாக பணத்தை பெற்றுக் கொள்ளும் மிக முக்கியமான இடமாக உள்ளது.
லங்கா4 (Lanka4)
அனுசரணை