இலங்கை
யாழில் விளையாட சென்ற இளைஞனுக்கு நேர்ந்த துயரம்

யாழில் விளையாட சென்ற இளைஞனுக்கு நேர்ந்த துயரம்
யாழ்ப்பாணம் – நாவாந்துறை சென்மேரிஸ் விளையாட்டுக்கழகழக மைதானத்தில் கால்பந்து விளையாடிக்கொண்டிருந்த நபர் மீது கோல் கம்பம் வீழ்ந்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் 29 வயதுடை யுவராஜ் செபஸ்தியாம்பிள்ளை என்பவரே உயிரிழந்துள்ளார்.
நாவாந்துறை சென் மேரிஸ் வியைாட்டுக்கழக மைதானத்தில் நேற்று (20) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது படுகாயமடைந்த நபர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.