பொழுதுபோக்கு
வாங்க சார்னு சொல்லிட்டு ஏன் அழுவுறீங்க? கிங்காங் வீட்டுக்கு மொய் கவருடன் சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்த மன்சூர் அலிகான்

வாங்க சார்னு சொல்லிட்டு ஏன் அழுவுறீங்க? கிங்காங் வீட்டுக்கு மொய் கவருடன் சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்த மன்சூர் அலிகான்
சமீபத்தில் நடந்த மிக பிரம்மாண்ட மற்றும் மக்களின் கவனத்தை ஈர்த்த நிகழ்வு என்றால் அது காமெடி நடிகர் கிங்காங் மகள் திருமணம் தான். இந்த திருமணத்தற்கு பத்திரிக்கை வைக்கும் நிகழ்வையே ட்ரெண்டிங்கில் விட்டு, புதிய அத்தியாயத்தை ஏற்படுத்திய நடிகர் கிங்காங், மகள் திருமணத்தை பற்றி அனைவரும் பேசும் வகையில் சிறப்பாக நடத்தி முடித்துள்ளார். பல முன்னணி நடிகர்களுக்கு பத்திரிக்கை கொடுக்கப்பட்டாலும் அவர்கள் திருமணத்தற்கு வரவில்லை.குறிப்பாக, கிங்காங் மகள், சிவகார்த்திகேயனின் ரசிகை என்று சொல்லப்படும் நிலையில், வீடு தேடி போய் அழைப்பிதழ் வைத்தும் அவர் திருமணத்திற்கு வரவில்லை. அவர் மட்டும் இல்லாமல் பல முன்னணி நடிகர்களும் இந்த திருமணத்திற்கு வராதது குறித்து ரசிகர்கள் நெட்டிசன்கள் என பலரும், கடுமையாக விமர்சிக்க தொடங்கினர். மேலும் இவ்வளவு மக்கள் கூட்டம் வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்று கிங்காங் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.யோகிபாபு, தேவயானி போன்ற நட்சத்திரங்கள், பக்கத்தில் வந்து கூட்டத்தை பார்த்தவுடன் அப்படியே சென்றுவிட்டார்கள். நடிகர் வடிவேலு, திருமணத்திற்கு வரமுடியவில்லை என்றாலும் அவரின் ஆட்கள் வந்து கலந்துகொண்டு, ஒரு லட்சம் பணம் கொடுத்துவிட்டு சென்றார்கள் என்றும் கிங்காங் கூறியிருந்தார். அதேசமயம் முன்னணி நடிகர்கள் வராதது குறித்து நெட்டிசன்கள் விமர்சனம் செய்தததை தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்தில் மணமக்களை தனது வீட்டிற்கு அழைத்து வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.இந்த திருமணத்தற்கு வராத நடிகர் மன்சூர் அலிகான், ஷூட்டிங் ஸ்பாட்டில் மாட்டிக்கொண்டதாகவும், பெரிய கம்பெனியா இருந்தாலும் பரவாயில்லை. சின்ன கம்பெனி அதான் விட்டுவிட்டு வரமுடியவில்லை. சென்னை வந்தவுடன் நான் பார்க்கிறேன் என்று வீடியோ மூலம் கூறியிருந்தார். இந்த வீடியே சமூகவலைளங்களில் வைரலாக பரவிய நிலையில், தற்போது நடிகர் மன்சூர் அலிகான் மொய் கவருடன், கிங்காங் வீட்டுக்கு சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.வீடியோவில், வீட்டுக்கு வரும் மன்சூர் அலிகான், ஜாலியாக நடந்து வர அவரை, கிங்காங் மனைவி வரவேற்கிறார். அவரை பார்த்து என்ன வாங்க சார்னு சொல்லிட்டு அழுவுறீங்க, என்று கேட்க, அதற்கு கிங்காங் ஆனந்த் கண்ணீர் என்று சொல்கிறார். அதன்பிறகு வீட்டுக்குள் சென்று, அனைவரிடமும் பேசிக்கொண்டிருக்கிறார். இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. திருமணத்திற்கு வரவில்லை என்றாலும், வீட்டிற்கு வந்து மன்சூர் அலிகான் மணமக்களை வாழ்த்தியுள்ளார்.A post shared by Actorkingkong (@actor_kingkong)அதே சமயம், இந்த திருமணத்தில், தி.மு.க. தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், அதிமுகவின் ஜெயகுமார், தே.மு.தி.க பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் பங்கேற்றிருந்தனர். இந்த திருமண விழாவில் கிங்காங்கை தனது இடுப்பில் தூங்கி வைத்துக்கொண்டு முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் நடந்துகொண்ட விதம், பலரையும் கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.