பொழுதுபோக்கு
விஜய்க்கு கட்சி துவங்கும் தைரியம் வந்தது இங்கு தான்; யார் அந்த கல்யாணசுந்தரம்? பார்த்திபன் த்ரோபேக் போட்டோ!

விஜய்க்கு கட்சி துவங்கும் தைரியம் வந்தது இங்கு தான்; யார் அந்த கல்யாணசுந்தரம்? பார்த்திபன் த்ரோபேக் போட்டோ!
பார்த்திபன் ஒரு நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், மற்றும் எழுத்தாளர் என பன்முகத் திறமைகளைக் கொண்டவர். இயக்குநர் கே. பாக்யராஜின் உதவி இயக்குநராக தனது திரைப் பயணத்தைத் தொடங்கினார் பார்த்திபன். அங்கிருந்து கற்ற பாடங்கள் அவரது தனித்துவமான பாணிக்கு அடித்தளமாக அமைந்தன. 1989 ஆம் ஆண்டு வெளியான ‘புதிய பாதை’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்று, பார்த்திபனுக்கு சிறந்த அறிமுக இயக்குநருக்கான தேசிய விருதையும் பெற்றுத் தந்தது.சமீபத்தில் விஜய் கட்சி தொடங்கியபோது, பார்த்திபன் ஒரு பழைய புகைப்படத்தைப் பகிர்ந்து, விஜய் திருமணங்களை நடத்தி வைத்த நற்பணிகளை நினைவுபடுத்தினார். அத்தகைய நல்ல காரியங்கள் தான் விஜய்க்கு அரசியல் தைரியத்தை அளித்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருப்பது பற்றி பார்ப்போம். இயக்குநர் பார்த்திபன், நடிகர் விஜய் ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கியதற்கு எங்கிருந்து தைரியம் வந்தது என்பது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பழைய புகைப்படத்தைப் பகிர்ந்து பதிவிட்டுள்ளார். ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியுள்ளார். இந்த முடிவு குறித்து பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், இயக்குநர் பார்த்திபன் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு பழைய புகைப்படத்தைப் பகிர்ந்து, விஜய்க்கு அரசியல் கட்சி தொடங்கும் தைரியம் எங்கிருந்து வந்தது என்பது குறித்து சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.பார்த்திபன் தனது பதிவில், “கல்யாணசுந்தரம்’ போட்டோ செஷனோடு முடிந்து(கை)விட்டப் படம். ஆனால் பூஜையன்று 10 ஜோடிகளுக்கு என் சொந்தச் செலவில் தாலி முதல் மெட்டி வரை, தட்டுமுட்டு சாமான் பெட்டி படுக்கை என சீர் செய்து சினிமா பூஜைகளை பிரயோஜனமாகவும் செய்யலாம் என தொடங்கி வைத்தேன். அதுவே பின் தொடரப்பட்டது பலரால்.” என்று குறிப்பிட்டுள்ளார்.மேலும், “பின்னொரு காலத்தில் தளபதி விஜய் என் தலைமையில் 16 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்தார். “இதன் மூலம் புண்ணியம் சேர்த்துக் கொள்ளும் விஜய் தான் மணமக்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்“ என அப்போது புரட்டிப் பேசினேன். அப்படிப்பட்ட நல்ல காரியங்கள் எல்லாம் சேர்ந்து தான் அவருக்கு கட்சித் துவங்கும் தைரியம் வந்தது. யாரோ ஒருவர் இந்த போட்டோவை அனுப்பி என் பழைய நினைவை கீறியதால்…” என்று பார்த்திபன் தனது பதிவை முடித்துள்ளார்.இந்த பதிவு மூலம், விஜய் தனது ஆரம்ப காலத்திலேயே பொதுநல காரியங்களில் ஈடுபட்டதும், அதுவே அவருக்கு இன்று அரசியல் பிரவேசத்திற்கான துணிச்சலை அளித்திருக்கலாம் என்பதும் பார்த்திபனின் கருத்து வெளிப்பட்டுள்ளது. விஜய் செய்த நற்காரியங்கள் அவருக்குள் ஒரு நம்பிக்கையை விதைத்திருப்பதை பார்த்திபன் தன் பாணியில் குறிப்பிட்டுள்ளார்.கல்யாணசுந்தரம்’போட்டோ செஷனோடு முடிந்து(கை)விட்டப் படம்.ஆனால் பூஜையன்று 10 ஜோடிகளுக்கு என் சொந்தச் செலவில் தாலி முதல் மெட்டி வரை, தட்டுமுட்டு சாமான் பெட்டி படுக்கை என சீர் செய்து சினிமா பூஜைகளை பிரயோஜனமாகவும் செய்யலாம் என தொடங்கி ஙைத்தேன்.அதுவே பின் தொடரப்பட்டது பலரால். பின்னெரு… pic.twitter.com/ub6IxkpxzJ