Connect with us

தொழில்நுட்பம்

6000mAh பேட்டரி, 44W ஃபாஸ்ட் சார்ஜிங்… பட்ஜெட்டில் 5G ஸ்மார்ட்போன் விவோ Y50m, Y50 அறிமுகம்!

Published

on

Vivo Y50m 5G, Y50 5G Launched

Loading

6000mAh பேட்டரி, 44W ஃபாஸ்ட் சார்ஜிங்… பட்ஜெட்டில் 5G ஸ்மார்ட்போன் விவோ Y50m, Y50 அறிமுகம்!

ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான Vivo, தனது பிரபலமான Y சீரிஸில் புதிய 5G ஸ்மார்ட்போன்களான Vivo Y50m 5G மற்றும் Vivo Y50 5G ஆகியவற்றை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த 2 மாடல்களும் ஒரே மாதிரியான வடிவமைப்பு மற்றும் அடிப்படை அம்சங்களைப் பகிர்ந்து கொண்டாலும், அவற்றின் ரேம் (RAM) திறனில் சில முக்கிய வேறுபாடுகள் உள்ளன.முக்கிய அம்சங்களும், வேறுபாடுகளும்:ரேம் (RAM) வித்தியாசம்: Vivo Y50m 5G: 6GB ரேம், Vivo Y50 5G: 4GB ரேம்2 போன்களும் சக்திவாய்ந்த MediaTek Dimensity 6300 சிப்செட் (ஆக்டா-கோர் 6nm) மூலம் இயக்கப்படுகின்றன. இவை 12GB ரேம் மற்றும் 256GB உடன் கிடைக்கின்றன. பயனர்களுக்கு நீண்ட நேர பயன்பாட்டை உறுதி செய்யும் வகையில், 6000mAh பெரிய பேட்டரியுடன் வருகின்றன. இது 44W ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை ஆதரிக்கிறது. ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 52 மணிநேரம் வரை பேசும் நேரத்தை Vivo உறுதி செய்கிறது.டிஸ்ப்ளே: Vivo Y50m 5G மற்றும் Vivo Y50 5G ஆகிய இரண்டும் 6.74 இன்ச் அளவுள்ள டிஸ்ப்ளேவை (720×1,600p ரெசல்யூஷன்) கொண்டுள்ளன. இந்த டிஸ்ப்ளே 90Hz refresh rate, 90.4% ஸ்கிரீன்-டு-பாடி விகிதம் மற்றும் 1,000 peak brightness போன்ற அம்சங்களுடன் சிறந்த காட்சி அனுபவத்தை வழங்குகிறது.Vivo Y50m 5G விலை விவரங்கள்:6GB RAM + 128GB ஸ்டோரேஜ்: CNY 1,499 (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.18,000)8GB RAM + 256GB ஸ்டோரேஜ்: CNY 1,999 (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.23,000)12GB RAM + 256GB ஸ்டோரேஜ்: CNY 2,299 (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.26,000)Vivo Y50 5G விலை விவரங்கள்:4GB RAM + 128GB ஸ்டோரேஜ்: CNY 1,199 (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.13,000)6GB RAM + 128GB ஸ்டோரேஜ்: CNY 1,499 (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.18,000)8GB RAM + 256GB ஸ்டோரேஜ்: CNY 1,999 (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.23,000)12GB RAM + 256GB ஸ்டோரேஜ்: CNY 2,299 (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.26,000)இந்த 2 மாடல்களும் Azure, Diamond Black மற்றும் Platinum ஆகிய 3 கவர்ச்சிகரமான வண்ண விருப்பங்களில் கிடைக்கின்றன. இவை தற்போது Vivo சீனாவின் அதிகாரப்பூர்வ ஆன்லைன் ஸ்டோர் மூலம் விற்பனைக்கு வந்துள்ளன.மற்ற சிறப்பம்சங்கள்:Vivo Y50m 5G மற்றும் Vivo Y50 5G ஆகிய இரண்டும் Vivo-வின் OriginOS 5 இயங்குதளத்தில் இயங்குகின்றன. பின்புற கேமரா: f/2.2 அப்பர்ச்சர் கொண்ட 13 மெகாபிக்சல் ஒற்றை பின்புற கேமரா சென்சார்.முன்புற கேமரா: செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக 5 மெகாபிக்சல் கேமரா.Bluetooth 5.4, GPS, Beidou, GLONASS, Galileo, QZSS, 3.5mm ஆடியோ ஜாக், OTG, Wi-Fi மற்றும் USB Type-C போர்ட் போன்ற பலதரப்பட்ட இணைப்பு விருப்பங்கள் இதில் அடங்கும். ஆக்சலரோமீட்டர், ஆம்பியன்ட் லைட் சென்சார், இ-காம்பஸ், இன்ஃப்ராரெட் ரிமோட் கண்ட்ரோல் மற்றும் ப்ராக்ஸிமிட்டி சென்சார் போன்ற சென்சார்கள் உள்ளன. பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்காக பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உள்ளது. மேலும், ஃபேஸ் அன்லாக் அம்சத்தையும் ஆதரிக்கின்றன. இந்த போன்கள் IP64 மதிப்பீட்டைக் கொண்டுள்ளன, அதாவது தூசி மற்றும் நீர் தெளிப்பிலிருந்து ஓரளவு பாதுகாப்பு கிடைக்கும். மேலும், SGS ஃபைவ்-ஸ்டார் டிராப் மற்றும் ஃபால் சான்றிதழையும் பெற்றுள்ளன, இது அவற்றின் உறுதித்தன்மை வெளிப்படுத்துகிறது. 2 போன்களும் 167.30×76.95×8.19mm அளவுகளையும், 204 கிராம் எடையையும் கொண்டுள்ளன.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன