Connect with us

சினிமா

‘Bad Girl’ டீசரால் சிக்கலில் சிக்கிய வெற்றி மாறன்.! நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு.!

Published

on

Loading

‘Bad Girl’ டீசரால் சிக்கலில் சிக்கிய வெற்றி மாறன்.! நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு.!

பிரபல தயாரிப்பாளர் வெற்றி மாறன் தயாரித்து வரும் ‘Bad Girl’ என்ற புதிய படத்தின் டீசர் தற்போது சர்ச்சையின் நடுவில் சிக்கியுள்ளது. சிறார்களை தவறாக சித்தரிக்கும் காட்சிகள் அடங்கியுள்ளதற்காக, மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி தனபால், யூடியூபில் இருந்து அந்த டீசரை உடனடியாக அகற்ற உத்தரவிட்டுள்ளார்.இந்த உத்தரவு, சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த மூவர் தாக்கல் செய்த வழக்கின் அடிப்படையில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சமூக ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய வகையில் சிறுவர், சிறுமிகளை தவறான முறையில் படம் பிடித்துள்ளதாக அவர்கள் மனுவில் தெரிவித்துள்ளனர்.‘Bad Girl’ டீசர் யூடியூபில் வெளியான சில மணி நேரங்களிலேயே, அந்தக் காணொளியில் இடம்பெறும் காட்சிகள் பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தின. இதனாலேயே அப்படத்தின் டீசர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுகுறித்து படக்குழு எந்தவொரு விளக்கமும் அளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன