இந்தியா
இந்தியாவின் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் இராஜினாமா!

இந்தியாவின் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் இராஜினாமா!
இந்தியாவின் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் நேற்றையதினம் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இது தொடர்பாக அவர் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,
மருத்துவ ரீதியான காரணங்களுக்காக துணை ஜனாதிபதி பொறுப்பில் இருந்து நான் விலகுகிறேன். எனது இராஜினாமா உடனடியாக அமுலுக்கு வரும். எனது பணியில் நான் கவனம் செலுத்த எனக்கு ஆதரவு கொடுத்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஜூன் 25ஆம் திகதி குமாவோன் பல்கலைக்கழகத்தின் பொன்விழா கொண்டாட்டங்களில் கலந்து கொண்டபோது ஜக்தீப் தன்கர் மயக்கமடைந்த சம்பவத்தின் ஒரு மாதத்தின் பின்னர் அவரது இராஜினாமா வந்துள்ளது. 74 வயதான ஜெக்தீப் தன்கர், கடந்த 2022 ஆம் ஆண்டு இந்தியாவின் 14ஆவது துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்றதுடன் அவர், மாநிலங்களவையிலும், வங்காளத்திலும் மாநில ஆளுநராக தனது முத்திரையைப் பதித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.