பொழுதுபோக்கு
கிங்காங் வீட்டு கல்யாணத்தில் ரூ1 லட்சம் மொய்… நிஜத்தில் நடிக்கும் வடிவேலு? பிரபல தயாரிப்பாளர் பாய்ச்சல்

கிங்காங் வீட்டு கல்யாணத்தில் ரூ1 லட்சம் மொய்… நிஜத்தில் நடிக்கும் வடிவேலு? பிரபல தயாரிப்பாளர் பாய்ச்சல்
நடிகர் வடிவேலுவுக்கும் நடிகர் கிங் காங் சங்கருக்கும் இடையே பல ஆண்டுகளாக ஒரு தொழில்முறை மற்றும் தனிப்பட்ட உறவு இருந்து வருகிறது. இருவரும் இணைந்து பல படங்களில் நகைச்சுவைக் காட்சிகளில் நடித்துள்ளனர். குறிப்பாக, வடிவேலுவின் பெரும்பாலான படங்களில் கிங் காங் ஒரு அங்கமாக இருந்துள்ளார். இது அவர்களின் திரையுலக உறவை வலுப்படுத்தியுள்ளது.சமீபத்தில், கிங் காங் தனது மகள் கீர்த்தனாவின் திருமணத்தை நடத்தினார். இந்த திருமணத்திற்கு வடிவேலுவால் நேரில் கலந்துகொள்ள முடியவில்லை. இருப்பினும், அவர் தனது மேலாளரை அனுப்பி வைத்ததுடன், ஒரு லட்சம் ரூபாய் அன்பளிப்பாகவும் வழங்கியதாக கிங்காங் தெரிவித்தார். வடிவேலு, கிங் காங்கிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அப்போது, திருமணத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டதே தமிழ்நாட்டில் உள்ள எட்டரை கோடி மக்களும் வந்தது போல என்று கூறி, யாரும் வராததைக் குறித்து கவலைப்பட வேண்டாம் என்று ஆறுதல் அளித்ததாகவும் கிங் காங் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.இருப்பினும், இந்த நிகழ்வு குறித்து தயாரிப்பாளர் பாலாஜி பிரபு ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். “வடிவேலு நேரில் வந்திருந்தால் கிங் காங்கிற்கு எவ்வளவு மகிழ்ச்சி கிடைத்திருக்கும். சினிமா நடிப்பை நிஜ வாழ்க்கையிலும் ஏன் தொடர வேண்டும்?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.கிங் காங் தனது மகள் கீர்த்தனாவின் திருமண வரவேற்பில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எம்.பி. திருமாவளவன், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் போன்ற முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். நடிகர் வடிவேலுவால் நேரில் கலந்துகொள்ள இயலாததால், தனது மேலாளரை அனுப்பி வைத்ததுடன், ஒரு லட்சம் ரூபாய் மொய்யும் வைத்தார் என்று கிங் காங் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். வடிவேலு கிங் காங்கிடம் பேசுகையில், “உங்கள் மகளின் திருமணத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வந்ததே தமிழ்நாட்டிலிருந்து எட்டரை கோடி பேரும் வந்தது போன்றது. அத்தனை பேரும் வந்தாலும் உங்கள் வீடு தாங்குமா? நீங்கள் பத்திரிகை வைத்தவர்கள் வரவில்லை என்று பலர் உசுப்பேத்துவார்கள். அதை நினைத்து கவலைப்படாதீர்கள். அதான் முதலமைச்சரே வந்துவிட்டாரே” என்று கூறியிருந்தார். மேலும் ஒரு லட்சம் ரூபாய் மொய் வைத்ததாகவும் கிங் காங் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.கிங் காங் தனது மகளின் திருமணத்திற்காக ஒட்டுமொத்த திரையுலகிற்கும் அழைப்பிதழ் கொடுத்திருந்தார். அழைப்பிதழ் கொடுக்கும் அவரது புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவின. சிலர் வழக்கம் போல இதனையும் விமர்சித்தனர். இருப்பினும், கிங் காங் இந்த விமர்சனங்களை பொருட்படுத்தவில்லை.இந்நிலையில், தயாரிப்பாளர் பாலாஜி பிரபு ஒரு தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், “திரைத்துறையில் எல்லோருமே வர வேண்டும் என்றுதான் கிங் காங் அழைப்பிதழ் கொடுத்தார். அவரை எவ்வளவோ பேர் கிண்டல் செய்திருப்பார்கள். ஆனால் அதையெல்லாம் தாங்கித்தான் அவர் இந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறார். எனவே அனைவருமே வர வேண்டும் என்று விருப்பப்பட்டிருப்பார்.வர வேண்டும் என்று நினைத்திருந்தால் கண்டிப்பாக வந்திருக்கலாம். கேன்சல் செய்ய முடியாத அளவுக்கு எந்த நிகழ்ச்சியும் இல்லை. வடிவேலு தொலைபேசியில் பேசுகிறார். அப்போது ஏன், ‘மேனேஜர் கொடுத்தாங்களா’ என்று கேட்க வேண்டும்? அப்போ என்ன அர்த்தம், ‘பணம் கொடுத்ததை வெளியே சொல்கிறாரா வடிவேலு?’ அவர் பணம் கொடுத்ததைவிட வந்திருந்தால் கிங் காங்கிற்கு எவ்வளவு மகிழ்ச்சி கிடைத்திருக்கும். சினிமாவில் வடிவேலு நடிக்கலாம். நிஜத்தில் ஏன் நடிக்க வேண்டும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.