இலங்கை
குருக்கள்மடம் மனிதப் புதைகுழி தோண்டல் வழக்கு ஒத்திவைப்பு!

குருக்கள்மடம் மனிதப் புதைகுழி தோண்டல் வழக்கு ஒத்திவைப்பு!
குருக்கள்மடம் மனிதப் புதைகுழி தோண்டப்படல் வேண்டும் என்ற வழக்கு அடுத்த மாதம் ஆகஸ்ட் 25 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு திங்கட்கிழமை (21) களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றத்தில் மீள விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது கடந்த வழக்கில் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் மற்றும் சட்டமா அதிபருக்கு 21ஆம் திகதி திங்கட்கிழமை களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு களுவாஞ்சி குடி நீதிமன்றம் கட்டளை பிறப்பித்திருந்தது.
எனினும் நேற்றைய தினம் இந்த வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது சட்டமா அதி பரை பிரதிநிதித்துவப்படுத்தி எவரும் ஆஜராகி இருக்கவில்லை. எனினும் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திலிருந்து இரண்டு சட்டத்தரணிகள் ஆஜராகி சமர்ப்பணங்களை முன்வைத்தனர்.
அவர்கள் களுவாஞ்சிக்குடி நீதிமன்றத்துக்கு காணாமல்போனோர் அலுவலகத்தினால் ஒரு விரிவான கடிதத்தினை ஏற்கனவே அனுப்பியிருந்ததாகவும் குருக்கள்மடம் மனிதப் புதைகுழி தோண்ட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இருப்பதாகவும் அதே நிலைப்பாட்டிலேயே தற்போதும் இருப்பதா சுவும் தெரிவித்தனர்.
இவற்றை செவிமடுத்த நீதிபதி ஏற்கனவே திட்ட வரைவு ஒன்று சட்ட வைத்திய அதிகா ரியினால் நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. அது 2020ஆம் ஆண்டு சமர்ப்பிக் கப்பட்டதால் கால மாற்றத்தினால் அதை மீளாய்வு செய்து மீள அந்த திட்ட வரைவை நீதிமன்றத்துக்கு அடுத்த தவணையின் போது சமர்ப்பிக்குமாறு சட்ட வைத்திய அதி காரிக்கு நீதிவான் கட்டளையிட்டார்.
அத்துடன் அடுத்த தவணையான 25.08. 2025 ஆம் திகதி சட்டமா அதிபரை ஆஜரா குமாறும் கட்டளையிட்ட நீதிவான் அடுத்த மாதம் ஆகஸ்ட் 25ஆம் திகதிக்கு இந்த வழக்கை ஒத்திவைத்தார்.
வழக்கில் முறைப்பாட்டாளரான அப்துல் மஜீத் அப்துர் ரஊப் நீதிமன்றத்தில் பிரசன்னமாகி இருந்ததுடன் அவரின் சார்பில் குரல்கள் இயக்கத்தின் சட் டத்தரணிகள் ஆஜராகி இருந்தனர்.
12071990 ஆம் திகதி புனித ஹஜ் கட மையை நிறைவுசெய்து வீடு திரும்பிய காத் தான்குடியைச் சேர்ந்த ஹஜ் யாத்திரிகர்கள் மற்றும் வியாபாரிகள் கல்முனை மட் டக்களப்பு வீதியில் குருக்கள்மடம் எனும் இடத்தில் கடத்திக் காணாமலாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டமை தொடர்பில் பாதிக்கப்பட்ட அப்துல் மஜீத் அப்துல் ரவூப் என்பவரால் களுவாஞ்சிக்குடி பொலிஸாருக்கு முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.
அதனடிப்படையில் கடந்த 2014 ஆம் ஆண்டு களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்றில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
வழக்கின் முறைப்பாட்டாளரான அப்துல் மஜீத் அப்துல் ரவூப் என்பவரின் அறிவுறுத் தலுக்கு அமைவாக 11.07 2025 ஆம் திகதியாகிய வெள்ளிக்கிழமை குரல்கள் இயக்கத் தின் சட்டத்தரணியால் களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட நகர்த்தல் பத்திரம் மூலம் குறித்த வழக்கானது திறந்த மன்றில் மீள எடுத்துக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
லங்கா4 (Lanka4)
அனுசரணை