Connect with us

இலங்கை

கூட்டணிக்கு சீமான், விஜய்க்கு அழைப்பு விடுத்த இ.பி.எஸ்!

Published

on

Loading

கூட்டணிக்கு சீமான், விஜய்க்கு அழைப்பு விடுத்த இ.பி.எஸ்!

தமிழகத்தில் 2026 இல் சட்டமன்ற தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில்,
தற்போது தீவிர பிரச்சாரத்தில் , தி.முக மற்றும் அ.தி.மு.க ஈடுப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவிக்கையில்,

Advertisement

2026 சட்டசபை தேர்தலிலும் அ.தி.மு.க. தலைமையில் ஒற்றைக்கட்சி ஆட்சி தான் அமையும்.

கட்சியினரை குஷிப்படுத்த கூட்டணி ஆட்சி என்று பேசுவதை எல்லாம் பொருட்படுத்த வேண்டியதில்லை.

அடுத்த அரசு மக்களின் எண்ணத்தின்படி அமையும். தமிழ்நாட்டில் ஒற்றைக்கட்சி ஆட்சியைத்தான் மக்கள் விரும்புகிறார்கள். அ.தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.

Advertisement

சீமான், விஜய் தரப்புடன் கூட்டணி தொடர்பாக இதுவரை பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. ஆனால் தி.மு.க.வை எதிர்க்க வேண்டும் என்ற ஒத்த மனமுடைய அனைத்து கட்சிகளும் அ.தி.மு.க.வுடன் ஒன்றிணைய வேண்டும்.

அந்த வகையில், விஜய், சீமான் தரப்பும் அடங்கும் என்றார்.

இதனிடையே, பா.ஜ.க. கூட்டணி உடையுமா? என்ற கேள்விக்கு மறுப்பு தெரிவித்த எடப்பாடி பழனிசாமி கூட்டணியை உடைக்கும் முயற்சி வெற்றி பெறாது என்றும் கூறியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன