இலங்கை
சஜித்தின் பதவியைப் பறிக்கும் திட்டமில்லை; முஜிபூர் ரஹ்மான்

சஜித்தின் பதவியைப் பறிக்கும் திட்டமில்லை; முஜிபூர் ரஹ்மான்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை அந்தப் பதவியில் இருந்து நீக்குவதற்கு இரகசிய பேச்சுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன என வெளியாகும் செய்திகளை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் நிராகரித்துள்ளார்.
கொழும்பில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் தெரிவித்ததாவது-
அவ்வாறு எவ்வித இரகசியப்பேச்சும் எங்கும் நடக்கவில்லை. அதேபோல எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் மாற்றம் செய்வதற்குரிய எந்தவொரு தேவைப்பாடும் ஐக்கிய மக்கள் சக்திக்கு எழவில்லை. இது பற்றி நாடாளுமன்றக் குழுவும் அவதானம் செலுத்தவில்லை. கட்சிக்குள் இப்படியான எவ்வித யோசனையும் முன்வைக்கப்படவும் இல்லை- என்றார்.