பொழுதுபோக்கு
சாக்லேட், தர்பூசணி ஓகே… ஆனா அன்னாசி பரோட்டா ஃபெயிலியர்: படப்பிடிப்பில் தயாரான புதுவித உணவுகள்!

சாக்லேட், தர்பூசணி ஓகே… ஆனா அன்னாசி பரோட்டா ஃபெயிலியர்: படப்பிடிப்பில் தயாரான புதுவித உணவுகள்!
பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி – நித்யா மேனன் நடித்துள்ள தலைவன் தலைவி படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த படத்திற்காக புதிய உணவு ஒன்றை விஜய் சேதுபதி கண்டுபிடித்துள்ளார்.பசங்க படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பாண்டிராஜ், அடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் மெரினா, கார்த்தி நடிப்பில் கடைக்குட்டி சிங்கம், சூர்யா நடிப்பில் எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட சில வெற்றிப்படங்களை இயக்கிய நிலையில், தற்போது அவர் விஜய் சேதுபதி நடிப்பில் தலைவன் தலைவி என்ற படத்தை இயக்கியுள்ளார். நித்யா மேனன் நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில், தீபா, யோகி பாபு, மைனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையைமத்துள்ளார். இந்த படத்தில் இடம் பெற்றுள்ள என்னடி சித்திரமே பாடல், பலரின் ரிங்மோனாக மாறியுள்ளது. சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம், வரும் ஜூலை 25-ந் தேதி வெளியாக உள்ளது. இதனிடையே சமீபத்தில் இந்த படத்தில் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவின் மூலம் படத்திற்கு பெரிய ப்ரமோஷன் கிடைத்துள்ள நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.சமீபத்தில் இந்த படத்திற்கான இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், படக்குழுவினர் அனைவரும் தற்போது யூடியூப் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர். அந்த வகையில் விஜய் சேதுபதி, நித்யா மேனன், இயக்குனர் பாண்டியராஜ் ஆகிய மூவரும், மாலைமுரசு வைப் யூடியூப் சேனலில் பேட்டி அளித்துள்ளது, இந்த பேட்டியில் விஜய் சேதுபதி, படத்தின் ஷூட்டிங் தொடங்குவதற்கு முன் இந்த படத்திற்காக என்ன செய்தேன் என்பது குறித்து பேசியுள்ளார்.இந்த படத்தில் ஆகாசவீரன் கேரக்டரில் நடித்துள்ள விஜய் சேதுபதி, பரோட்டா மாஸ்டாராக நடித்துள்ளார். இந்த கேரக்டருக்காக சென்னையில் அவரது அலுலகத்தின் அருகில், 2 மாதம் பரோட்டா எப்படி செய்வது என்பது குறித்து பயிற்சி எடுத்துள்ளார். படப்பிடிப்பு நடந்த இடத்தில், இருக்கும் பரோட்டா கல்லில் இருந்து படக்குழுவினருக்கு சமைத்து கொடுத்துள்ளார். மேலும், விதவிதமாக ட்ரை பண்ணுவோம் என்று கூறியுள்ள விஜய் சேதுபதி, டீசரில் வரும் கொத்துபரோட்டா காட்சி படமாக்கப்பட்டபோது என்ன நடந்தது என்று கூறியுள்ளார்.இநத காட்சி படமாக்கப்பட்டபோது, கொத்திவிட்டு, அதில் சால்னா ஊற்ற வேண்டும். இப்படியே ஊற்றிக்கொண்டு இருக்கிறோம் அதிகாலை 3 மணிக்கு இந்த காட்சி படமாக்கப்பட்டது. ஆனால் வேற வேற ஷாட் எடுக்கும்போதும் அதை அதிக நேரம் கொத்திக்கொண்டே இருந்ததால், கொழ கொழனு பொங்கல் மாதிரி ஆகிவிட்டது. அதன்பிறகு அந்த நேரத்தில் ஒரு கடை திறந்திருந்தது. அங்கு சென்று நெய் மற்றும் முந்திரி வாங்கி வர சொன்னேன்.நெய், முந்திரி, மிளகு சேர்த்து தாளித்து கொட்டி, பரோட்டாவில் பொங்கல் செய்தோம். பரோட்டா பொங்கல் ஆகிவிட்டது. அனைவரும் சூப்பாரா இருக்கிறது என்று சொல்லி சாப்பிட்டார்கள். சீக்கிரமாக காலியாகிவிட்டது. அதேபோல் சாக்லேட் பரோட்டா, தர்பூசனி பரோட்டா, செய்தோம். ஆனால் அன்னாசி பழ பரோட்டா மட்டும் தோல்வி ஆகிடுச்சி என்று விஜய் சேதுபதி கூறியுள்ளார். மேலும் வேண்டுமென்றால் தலைவன் தலைவி ஹோட்டலே வைத்துவிடலாம் என்று கூறியுள்ளார்.