தொழில்நுட்பம்
சுனாமி வேகத்தில் பரவும் மாமோனா வைரஸ்… ஆஃப்லைனிலும் தாக்கும் மால்வேர்! வல்லுநர்கள் எச்சரிக்கை!

சுனாமி வேகத்தில் பரவும் மாமோனா வைரஸ்… ஆஃப்லைனிலும் தாக்கும் மால்வேர்! வல்லுநர்கள் எச்சரிக்கை!
ஸ்மார்ட்போன் பயனர்களை பெரும் பீதிக்குள்ளாக்கியுள்ளது ‘Mamona’ என்ற பெயரில் பரவி வரும் புதிய ரேன்சம்வேர் (Ransomware). வழக்கமான மால்வேர்களை போல் அல்லாமல், இணைய இணைப்பு இல்லாமலேயே தாக்கக்கூடிய திறன் கொண்டிருப்பதால் சைபர் பாதுகாப்பு வல்லுநர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.Mamona ஏன் ஆபத்தானது?பொதுவாக ரேன்சம்வேர்கள் இணையத்தின் வழியே பரவி, பயனர்களின் பைல்களை என்க்ரிப்ட் செய்து, அவற்றை மீண்டும் பெறுவதற்கு பணம் (ransom) கேட்கும். ஆனால் Mamona ரேன்சம்வேரின் மிக அச்சுறுத்தும் அம்சம் என்னவென்றால், ஆஃப்லைனிலும் செயல்படும் ஆற்றல் கொண்டது. அதாவது, உங்கள் கணினி அல்லது ஸ்மார்ட்போன் இணையத்துடன் இணைக்கப்படாவிட்டாலும், இந்த மால்வேர் உங்களைத் தாக்கும்.இணைய இணைப்பு இல்லாத கணினிகளையும் குறிவைக்க முடியும் என்பதால், பாரம்பரிய சைபர் பாதுகாப்பு நடவடிக்கை பலனளிக்காமல் போகலாம். முக்கியமாக USB டிரைவ்கள் (அ) வெளிப்புற ஹார்ட் டிரைவ்கள் வழியாக பரவுகிறது. நீங்கள் பொதுவான USB-யை பயன்படுத்தும் போது, அறியாமலேயே இந்த ரேன்சம்வேரை உங்கள் சாதனத்திற்குள் கொண்டு வரலாம். இது கணினியில் உள்ள முக்கியமான கோப்புகளை லாக் செய்வதுடன், தனது இருப்பைக் கண்டறிய முடியாதவாறு தடயங்களையும் அழிக்கக்கூடிய திறன் கொண்டது. இதனால், இதை யார் அனுப்பினார்கள் அல்லது எங்கிருந்து வந்தது என்பதைக் கண்டறிவது மிகவும் கடினம். இணையத்திலிருந்து முழுமையாகத் துண்டிக்கப்பட்ட, தனிமைப்படுத்தப்பட்ட நெட்வொர்க்குகளிலும் கூட Mamona ஊடுருவ முடியும் என்பது இதன் அபாயத்தை மேலும் அதிகரிக்கிறது.எப்படி பாதுகாப்பது?Mamona போன்ற ஆஃப்லைன் ரேன்சம்வேர்களில் இருந்து உங்களைப் பாதுகாக்க சில முக்கிய வழிமுறைகள் பற்றி பார்க்கலாம். உங்களுக்குத் தெரியாதவர்கள் கொடுக்கும் USB டிரைவ்களை கணினியில் செருக வேண்டாம். எப்போதும் புதுப்பிக்கப்பட்ட, நம்பகமான ஆன்டிவைரஸ் மென்பொருளைப் பயன்படுத்துங்கள். உங்கள் முக்கியமான கோப்புகளைத் தொடர்ந்து வெளிப்புற ஹார்ட் டிரைவ் (அ) கிளவுட் சேமிப்பகத்தில் பேக்கப் எடுத்து வையுங்கள். மின்னஞ்சல்கள் அல்லது குறுஞ்செய்திகளில் வரும் சந்தேகத்திற்கிடமான இணைப்புகளை கிளிக் செய்வதைத் தவிர்க்கவும். உங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டம் மற்றும் பிற மென்பொருட்களை எப்போதும் சமீபத்திய பதிப்பிற்குப் புதுப்பித்த நிலையில் வைத்திருங்கள்.Mamona போன்ற புதிய தலைமுறை ரேன்சம்வேர்கள் சைபர் தாக்குதல்களின் பரிணாம வளர்ச்சியைப் பிரதிபலிக்கின்றன. எனவே, நமது டிஜிட்டல் பாதுகாப்பை மேம்படுத்துவது இப்போது முன்னெப்போதையும் விட முக்கியம்.