சினிமா
தந்தை வடிவேல் பாலாஜி இல்லாமல் கஷ்டப்படும் மகன் ஸ்ரீகாந்த்.. இப்படி ஒரு நிலைமையா

தந்தை வடிவேல் பாலாஜி இல்லாமல் கஷ்டப்படும் மகன் ஸ்ரீகாந்த்.. இப்படி ஒரு நிலைமையா
விஜய் டிவியின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தவர்களில் ஒருவர் வடிவேல் பாலாஜி. கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். அதன்பின் சிரிச்சா போச்சு மிகப்பெரிய அளவில் வடிவேல் பாலாஜிக்கு பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது.இவருக்கு ஜோதிலட்சுமி என்ற மனைவியும், ஸ்ரீகாந்த் என்ற மகனும், ஸ்ரீதேவி என்கிற மகளும் உள்ளனர். கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 24ம் தேதி திடீரென இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு சிகிச்சை பலனின்றி 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 10ஆம் தேதி உயிரிழந்தார். இவருடைய மரணம் மிகப்பெரிய அதிர்ச்சியை திரையுலகில் உள்ள அனைவருக்கும் தந்தது. பாலாஜியின் பிள்ளைகளின் படிப்பு செலவுகளை நடிகர் சிவகார்த்திகேயன் ஏற்றுக்கொண்டதாக சொல்லப்படுகிறது.இந்த நிலையில், வடிவேல் பாலாஜியின் மகன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. இதில் “அப்பா எனக்கு கஷ்டம் தெரியாமல் வளர்த்துட்டார். இப்போ நான் ரொம்ப கஷ்டப்படுகிறேன். இப்போ நான் வண்டி எடுத்திருக்கேன். அதுக்கு நான் தான் EMI கட்டுறேன். அப்பா இருந்தா அவரே வண்டி வாங்கி தந்திருப்பார். எனக்கு என் அம்மாவை நல்ல பாத்துக்கணும். அதுதான் என்னுடைய ஒரே ஆசை” என கூறியுள்ளார்.