இலங்கை
தமிழரின் இறையாண்மையை மீட்டால் அமெ.ஜனாதிபதி ட்ரம்பின் பெயரை நோபல் பரிசுக்கு பரிந்துரைப்போம்!

தமிழரின் இறையாண்மையை மீட்டால் அமெ.ஜனாதிபதி ட்ரம்பின் பெயரை நோபல் பரிசுக்கு பரிந்துரைப்போம்!
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவிப்பு
தமிழர்களின் இறையாண்மையை மீட்டெடுப்பதற்காக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் துணைநின்றால், அவருடைய பெயரை 50 இலட்சம் மக்களின் கையொப்பத்துடன் அமைதிக்கான நோபலுக்குப் பரிந்துரைப்போம் என்று காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்தனர். காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் வவுனியாவில் நேற்றுப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்தப் போராட்டத்தின் பின்னர் அவர்கள் ஊடகங்களிடம் தெரிவித்ததாவது:- 1948ஆம் ஆண்டு முதல் சிங்கள ஆட்சியாளர்களால் தமிழர்களுக்கு எதிராகப் பல்வேறு அடக்குமுறைகளும் கொலைகளும் கட்ட விழ்த்துவிடப்பட்டன. பல உலகத்தலைவர்கள் வந்து போய்விட்டார்கள். எவரும் நீதியை நிலை நாட்டவில்லை. ட்ரம்ப் மிகவும் துணிச்சலான தலைவர். தனது முடிவுகளை அவர் மிகவும் துணிச்சலாக நடைமுறைப்படுத்துகின்றார்.
அதிபர்ட்ரம்பிடம் இருந்து ஒரு தொலைபேசி அழைப்புவந்தால், தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் என்று நாங்கள் நம்புகின்றோம். எனவே, தமிழர்களின் இறையாண்மையை மீட்டெடுக்க அவர் எங்களுடன் நின்றால், 50 இலட்சம் கையொப்பங்களைத் திரட்டி அமைதிக்கான நோபலுக்கு அவரின் பெயரைப் பரிந்துரைப்போம் – என்றனர்.