இலங்கை
தருவதாகக் கூறிய வயற்காணி எங்கே… வவுனியாவில் மக்கள் போராட்டம்

தருவதாகக் கூறிய வயற்காணி எங்கே… வவுனியாவில் மக்கள் போராட்டம்
வயற்காணி வழங்குவதாக தமக்கு வழங்கப்பட்ட வாக்குறுதி 20 வருடங்களுக்கு மேலாகியும் நிறைவேற்றப்படவில்லை என்ரு வலியுறுத்தி வவுனியாவில் நேற்றுப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வவுனியா – செட்டிகுளம் கமநல சேவை நிலையத்துக்கு முன்பாக, மெனிக்பாம் மக்களால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் ஊடகங்களிடம் தெரிவித்ததாவது:-
2004ஆம் ஆண்டு சிதம்பரபுரம் முகாமில் இருந்து மெனிக்பாமில் நாங்கள் குடியேற்றம் செய்யப்பட்டோம். அப்போது எமக்கு குடும்பத்துக்குத் தலா ஒரு ஏக்கர் வயல் காணிகள் வழங்கப்படும் என்று வாக்குறுதி வழங்கப்பட்டது. ஆனால். 21 ஆண்டுகளாகியும் இன்றுவரை அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. எனவே, எமக்கு வழங்குவதாகக் கூறப்பட்ட காணிகளை உடனடியாக வழங்கவேண்டும் – என்றனர். சம்பவ இடத்துக்குச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன், ஆர்ப்பாட்டகாரர்களுடன் கலந்துரையாடியதுடன், விரைவில் குறித்த காணிகளைப் பெற்றுத்தருவதாக மக்களுக்கு வாக்குறுதியும் வழங்கினார். இதையடுத்து மக்கள் தங்களின் போராட்டத்தைக் கைவிட்டனர்.