இலங்கை
தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்க பரிந்துரை!

தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்க பரிந்துரை!
காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் டாக்டர் ஜகத் விக்ரமரத்ன இன்று (22) பாராளுமன்றத்தில் இந்த விடயத்தை அறிவித்தார்.
இடைநீக்கம் செய்யப்பட்ட காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனை விசாரிக்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசாரணைக் குழு, அவரை பதவியில் இருந்து நீக்க பரிந்துரைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசபந்து தென்னகோன் மீதான குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என்று ஏகமனதாக கண்டறியப்பட்ட அறிக்கை தனக்குக் கிடைத்ததாக சபாநாயகர் தெரிவித்தார்.
இதற்கிடையில், தொடர்புடைய அறிக்கையை அச்சிட்டு நாடாளுமன்ற இணையதளத்தில் வெளியிட முடிவு செய்யப்பட்டது.
தேசபந்து தென்னகோனின் தவறான நடத்தை மற்றும் கடுமையான அதிகார துஷ்பிரயோகம் குறித்து விசாரித்து அறிக்கை தயாரிக்க கடந்த ஏப்ரல் மாதம் ஒரு சிறப்பு விசாரணைக் குழு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
லங்கா4 (Lanka4)
அனுசரணை