இலங்கை
தோட்ட தொழிலாளர்கள் சம்பள விவகாரம் – கேள்வியெழுப்பும் சஜித்!

தோட்ட தொழிலாளர்கள் சம்பள விவகாரம் – கேள்வியெழுப்பும் சஜித்!
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கேள்வியெழுப்பினார்.
நாடாளுமன்றத்தில் இன்று (22.07.2025) இடம்பெற்று வரும், நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் நாடாளுமன்ற அலுவல்கள் மற்றும் வாய்மூல விடைக்கான வினாக்கள் இடம்பெற்று வரும் நிலையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, இந்த அரசாங்கள் பல வாக்குறுதிளை வழங்கி அவற்றை செய்து வந்தாலும் தோட்ட தொழிலாளர்கள் தொடர்பில் முற்றிலும் மறந்துவிட்டது.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் இந்த சட்டமூலத்தில் எவ்விதமான பரிந்துரைகளும் முன்வைக்கப்படவில்லை என்று குற்றஞ்சாட்டிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களின் சம்பளவிவகாரம் பற்றி உங்களுக்கு நினைவிருக்கின்றதா? என கேள்வியெழுப்பினார்.
அவர்களும் இந்த நாட்டில் தான் வாழ்கின்றார்கள். தேயிலை, றப்பர், தென்னை போன்ற பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு கடந்த அரசாங்கத்தின் மூலம் 1700 ரூபாய் அடிப்படை சம்பளமாக பெற்றுக்கொடுக்கப்பட்டது. ஆனால், 1350 ரூபாய் மாத்திரமே சம்பளமாக வழங்கப்படுகின்றது.
இதற்கு ஒரு நியாயமான தீர்வு வேண்டும். ஏன் அவர்களுக்கு இவற்றை செய்யமுன்வராமல் பார்த்துக் கொண்டிருக்கின்றீர்கள் எனவும் தனது கேள்விகளை முன்வைத்தார்.