Connect with us

இந்தியா

நீதிபதி வர்மா விவகாரம்: வழக்கறிஞர் ‘நீதிபதி’ என குறிப்பிடாததால் தலைமை நீதிபதி கவாய் அதிருப்தி!

Published

on

cji gavai and varma

Loading

நீதிபதி வர்மா விவகாரம்: வழக்கறிஞர் ‘நீதிபதி’ என குறிப்பிடாததால் தலைமை நீதிபதி கவாய் அதிருப்தி!

அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா, அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் கணக்கில் வராத பணம் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரத்தில் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இவரை வழக்கறிஞர் ஒருவர் அவரது குடும்பப் பெயரால் மட்டும் அழைத்ததற்கு இந்தியத் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் திங்கட்கிழமை எதிர்ப்பு தெரிவித்தார்.ஆங்கிலத்தில் படிக்க:பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக நீதிபதி வர்மா மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யக் கோரி வழக்கறிஞர் மேத்யூஸ் ஜே. நெடும்பரா மனு தாக்கல் செய்தபோது, தலைமை நீதிபதி கவாய் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். தனது மனுவை அவசரமாக விசாரிக்கக் கோரி, நீதிபதி வினோத் சந்திரன் அடங்கிய அமர்வு முன் நெடும்பரா, “நான் தாக்கல் செய்யும் மூன்றாவது ரிட் மனு இது” என்றார்.“இப்போதே அதை தள்ளுபடி செய்ய வேண்டுமானால், இப்போதே தள்ளுபடி செய்கிறேன்” என்று தலைமை நீதிபதி கவாய் கூறினார். இருப்பினும், நெடும்பரா, “இது தள்ளுபடி செய்ய முடியாதது. எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட வேண்டும்” என்றார்.பணம் கைப்பற்றப்பட்டதை உறுதி செய்த உள் விசாரணை குழுவின் அறிக்கைக்கு எதிராக நீதிபதி வர்மா தாக்கல் செய்த மனுவை வெளிப்படையாகக் குறிப்பிட்ட அவர்,  “இப்போது வர்மா அதையே கேட்பது போல் தெரிகிறது. ஒரு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட வேண்டும், ஒரு விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்றார்.நீதிபதி வர்மாவை ‘வர்மா’ என்று மட்டும் குறிப்பிட்டது தலைமை நீதிபதி கவாய்க்குப் பிடிக்கவில்லை. “அவர் உங்கள் நண்பரா? அவர் இன்னும் நீதிபதி வர்மா. நீங்கள் அவரை எப்படி அழைக்கிறீர்கள்? நீதிமன்றத்தில் சில கண்ணியத்துடன் இருங்கள். நீங்கள் ஒரு கற்றறிந்த நீதிபதியைக் குறிப்பிடுகிறீர்கள்… அவர் இன்னும் நீதிமன்றத்தின் நீதிபதி” என்று தலைமை நீதிபதி கவாய் கூறினார். இதற்கு நெடும்பரா, “அந்த மரியாதை அவருக்குப் பொருந்தும் என்று நான் நினைக்கவில்லை. இந்த விவகாரம் பட்டியலிடப்பட வேண்டும்” என்றார்.தலைமை நீதிபதி அவரை எச்சரித்து, “நீதிமன்றத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்று கட்டளையிடாதீர்கள்” என்றார். இதற்கு வழக்கறிஞர் நெடும்பரா “இல்லை, நான் வேண்டுகோள் மட்டுமே விடுக்கிறேன்” என்று பதிலளித்தார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன