Connect with us

இந்தியா

நீதிமன்ற உத்தரவை காற்றில் பறக்கவிட்ட புதுவை அரசு; அமைச்சரிடம் சிறைத்துறை ஊழியர்கள் மனு

Published

on

pdy central prison

Loading

நீதிமன்ற உத்தரவை காற்றில் பறக்கவிட்ட புதுவை அரசு; அமைச்சரிடம் சிறைத்துறை ஊழியர்கள் மனு

புதுச்சேரி மத்திய சிறைச்சாலையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை புதுவை அரசு இன்று வரை அமுல்படுத்தவில்லை என சிறைத்துறை காவலர்கள் உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தை சந்தித்து மனு கொடுத்தனர்.புதுச்சேரி மத்திய சிறையில் சிறைக்காவலர்களாக 24 நபர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் காவலர்களாக கடந்த 2000-ம் ஆண்டு பணியில் சேர்ந்தனர். 13.02.2004-ல் பணிநிரந்தரம் செய்யப்பட்டனர்.ஆதலால், புதிய பென்ஷன் திட்டத்திற்கு ஆளாக்கப்பட்டு நீதிமன்றத்ததை நாடினோம். சிறைத்துறை காவலர்களுக்குநீதிமன்றம் கடந்த 2018-ஆம் ஆண்டு பழைய பென்ஷன் வழங்க உத்தரவிட்டது. ஆனால், சிறை நிர்வாகம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் 24 சிறைக்காவலர்களும் மிகவும் மன உளைச்சலுக்கு  ஆளாக்கப்பட்டுள்ளனர். எனவே, இது தொடர்பாக  நீதிமன்ற உத்தரவை உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தை நேரில் சந்தித்து கோர்ட் உத்தரவையும் மனுவாக கொடுத்துள்ளனர். மேலும், எங்களுக்கு பழைய பென்ஷன் கிடைக்கவும், எங்களுடைய 24 குடும்பங்கள் வாழ தாங்கள் வழிசெய்து கோர்ட் உத்தரவை அமுல்படுத்தி, வேண்டுமென கேட்டுக்கொண்டனர். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன