இலங்கை
மட்டக்களப்பு மாவட்ட மருத்துவ உபகரணங்கள் களுத்துறைக்கு! – சாணக்கியன் தெரிவிப்பு!

மட்டக்களப்பு மாவட்ட மருத்துவ உபகரணங்கள் களுத்துறைக்கு! – சாணக்கியன் தெரிவிப்பு!
மட்டக்களப்பு மாவட்டத்தின் மருத்துவ தேவைகளுக்காக வழங்கப்படவிருந்த மருத்துவமனை உபகரணங்களை களுத்துறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் நாடாளுமன்ற அமைச்சர்கள் அதனை அவர்களின் அதிகாரத்தை பயன்படுத்தி பெற்றுக்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நாடாளுமன்றில் இன்று(22.07.2025) கருத்து தெரிவித்த இராசமாணிக்கம் சாணக்கியன் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், மருத்துவ தேவைகளுக்கு முக்கிய உபகரணமாக காணப்படும் சி.டி ஸ்கேனர் மட்டக்களப்புக்கு தேவையில்லை என சில முடிவுகள் எடுக்கப்பட்டமையை தாம் அறிந்ததாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.