Connect with us

இலங்கை

மூட நம்பிக்கைக்கு ஒரு அளவே இல்லையா? போலி சாமியாரை நம்பி சிறுநீரை குடித்த மக்கள்!

Published

on

Loading

மூட நம்பிக்கைக்கு ஒரு அளவே இல்லையா? போலி சாமியாரை நம்பி சிறுநீரை குடித்த மக்கள்!

  இந்தியாவில் அமானுஷ்ய சக்தி இருப்​ப​தாக கூறி, பக்​தர்​களை சித்​ர​வதை செய்த போலி சாமி​யார் மீது காவல்துறையினர் ​வழக்​குப் பதிவு செய்​துள்​ளனர்.

இந்திய மாநிலமான மகாராஷ்டிரா, சத்​ரபதி சம்​பாஜி நகர் மாவட்​டத்தில் உள்ள ஷியூர் கிராமத்தில் உள்ள கோயிலில் சஞ்​சய் பகாரே என்​பவர் சாமி​யா​ராக இருக்​கிறார்.

Advertisement

இவர் தனக்கு அமானுஷ்ய சக்தி இருப்​ப​தாக கூறி பக்தர்களை நம்ப வைத்துள்ளார்.

திருமணமாகாத பெண்களுக்கு திருமண ஏற்பாடு செய்ய முடியும் என்றும், குழந்தைப்பேறு இல்லாத தம்பதியினருக்கு அகோரி பூஜை மூலம் குழந்தை கிடைக்க வைக்க முடியும் என்றும், ஆவி​களை விரட்ட முடி​யும் என்றும் கூறியுள்ளார்.

போலி சாமியார் மூட நம்பிக்கைகளை 2 ஆண்டுகளாக பரப்பி வந்த நிலையில் தன்னை ‘பா​பா’ என்று அழைத்​துக் கொண்​டுள்​ளார். அதனை நம்பி ஏராளமான பக்தர்கள் இவரிடம் வந்துள்ளனர்.

Advertisement

தன்னிடம் வந்தவர்களை கம்பால் அடிப்பது, காலணி​களை வாயில் கவ்விக் கொண்டு கோயிலை சுற்றி வர சொல்வது போன்ற செயல்களை செய்துள்ளார்.

மேலும், இலை, தழைகளை உண்ண சொல்லி கட்டாயப்படுத்துவது, சிறுநீரை குடிக்க வைப்பது போன்ற இழிவான செயல்களை செய்துள்ளார்.

இந்நிலையில், மூட நம்​பிக்கை எதிர்ப்பு அமைப்பை சேர்ந்த சமூக ஆர்​வலர்​கள் சிலர், ரகசிய கமெ​ராக்​கள் மூலம் போலி சாமியார் செய்யும் செயல்களை சேகரித்து பொலிஸிடம் ஒப்படைத்தனர்.

Advertisement

இந்நிலையில் போலி சாமியாரை கைது செய்த பொலிஸார் ​ வி​சா​ரணை நடத்​தி வரு​கின்​றனர்​.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன