இலங்கை
வரிவிதிப்புப் பாதிப்புகளை எதிர்கொள்ள நடவடிக்கை; அமைச்சர் சமந்த வித்தியாரத்ன தெரிவிப்பு!

வரிவிதிப்புப் பாதிப்புகளை எதிர்கொள்ள நடவடிக்கை; அமைச்சர் சமந்த வித்தியாரத்ன தெரிவிப்பு!
அமெரிக்காவின் தீர்வை வரி அதிகரிப்பால் ஆடை மற்றும் இறப்பர் தொழிற்சாலைகளை வீழ்ச்சியடையாமல் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கும் என பெருந்தோட்ட மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்தியாரத்ன தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- அமெரிக்காவின் வரி அதிகரிப்பால் அமெரிக்காவுக்கு பிரதானமாக ஏற்றுமதி செய்யும் ஆடை மற்றும் இறப்பர் உற்பத்திகளுக்கு சிறியளவில் பாதிப்பு ஏற்படும் என நாங்கள் நம்புகிறோம். ஆயினும் இந்தப் பாதிப்பைக் கட்டுப்படுத்திக்கொள்ள நாங்கள் பல்வேறு வழிகளில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். எமது தொழிற்சாலைகளுக்கு ஏற்படும் பாதிப்பை எவ்வாறு குறைத்துக் கொள்ள முடியும் என்பது தொடர்பில் நாங்கள் பல்வேறு வழிகளில் கலந்துரையாடிவருகிறோம். இந்த வரி அதிகரிப்பால் அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ள தொழிற்சாலைகளைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டுவருகிறோம் என்பதை அந்தத் துறை சார்ந்தவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம் – என்றார்.