இலங்கை
ஷானியின் நியமனத்தில் நாம் தலையிடவில்லை! கத்தோலிக்கத் திருச்சபை தெரிவிப்பு

ஷானியின் நியமனத்தில் நாம் தலையிடவில்லை! கத்தோலிக்கத் திருச்சபை தெரிவிப்பு
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக ஷானி அபேசேகரவையும், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக ரவி செனவிரத்னவையும் நியமிக்குமாறு ஜனாதிபதியிடம், பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்தார் என வெளியாகியிருந்த செய்திகளை கத்தோலிக்கத் திருச்சபை நிராகரித்துள்ளது.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கத்தோலிக்க திருச்சபையின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ மேலும் தெரிவித்ததாவது:-
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக ஷானி அபேசேகரவையும், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக ரவி செனவிரத்னவையும் நியமிக்குமாறு பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தலையிடவோ குறைந்தபட்சம் ஆலோசனைகளை வழங்கவோ இல்லை. ஆனால், உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை நடத்திய பல அதிகாரிகள். கோத்தாபய ராஜபக்சவின் ஆட்சியின்போது இடமாற்றம் செய்யப்பட்டனர் என்றே கூறப்பட்டது. எனவே, அதிகாரிகள் சிலரின் பெயர்களைக் குறிப்பிட்டு கர்தினால் நியமனம் கோரினார் என்று வெளியாகும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை – என்றார்