Connect with us

தொழில்நுட்பம்

வேகமாக சுழலும் பூமி… ஜூலை 10 இந்த ஆண்டின் மிகக் குறுகிய நாளாக பதிவு!

Published

on

Second Shortest Day

Loading

வேகமாக சுழலும் பூமி… ஜூலை 10 இந்த ஆண்டின் மிகக் குறுகிய நாளாக பதிவு!

இந்த மாதம் பூமி வழக்கத்தைவிட வேகமாகச் சுழன்று வருகிறது. கடந்த ஜூலை 10-ம் தேதி இந்த ஆண்டின் மிகக்குறுகிய நாளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோன்ற நிகழ்வு ஆகஸ்ட் 5 அன்றும் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது. சி.என்.என் (CNN) செய்தி வெளியிட்ட தரவுகளின்படி, புவி சுழற்சி, குறிப்பு அமைப்புகள் சேவை (Earth Rotation and Reference Systems Service) மற்றும் அமெரிக்க கடற்படை ஆய்வு மையம் (US Naval Observatory) ஆகியவை இணைந்து இந்தத் தகவலை வெளியிட்டுள்ளன. ஜூலை 10 அன்று, பூமி தனது சுழற்சியை 1.36 மில்லி விநாடிகள் வேகமாக முடித்துள்ளது.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க2020-ம் ஆண்டு வரை, மிகக் குறுகிய நாளாகப் பதிவு செய்யப்பட்ட அளவு 24 மணி நேரத்தை விட -1.05 மில்லி விநாடிகள் குறைவாக இருந்தது. ஆனால், அதன் பிறகு பூமி இந்த அளவை சீராகக் கடந்து வருகிறது. குறிப்பாக, ஜூலை 5 அன்று -1.66 மில்லி விநாடிகள் என மிகக் குறுகிய நாளைப் பதிவு செய்தது.சுழற்சி வேகத்தைப் பாதிக்கும் காரணிகள் என்ன?பூமி தனது அச்சில் முழு சுற்று முடிக்க 24 மணி நேரம் ஆகும். இந்தக் கால அளவை “நாளின் நீளம்” (Length of Day – LOD) என்று அழைக்கிறோம். நாளின் நீளம் ஒரு மில்லி விநாடி (0.001 விநாடிகள்) போன்ற மிகச்சிறிய அளவில் மாறுபடலாம். நுட்பமான மாறுதல்களை அணு கடிகாரங்கள் (atomic clocks) மூலம் விஞ்ஞானிகள் பதிவு செய்கிறார்கள். நாளின் நீளத்தில் ஏற்படும் இந்த மாறுபாடுகள் பல காரணிகளைப் பொறுத்தது:சந்திரனின் ஈர்ப்பு விசை: சந்திரன் பூமியின் நடுவரைக் கோட்டிற்கு (equator) அருகில் இருக்கும்போது பூமியின் சுழற்சி மெதுவாகவும், தொலைவில் உள்ள அட்சரேகைகளில் இருக்கும்போது வேகமாகவும் இருக்கும்.வளிமண்டலம் மற்றும் பெருங்கடல்கள்: வளிமண்டலம் பருவகால மாற்றங்களால் மெதுவாகும்போது, பூமி அதை ஈடுசெய்யும் வகையில் வேகமாகச் சுழல்கிறது. ஏனெனில், பூமி மற்றும் அதன் வளிமண்டலத்தின் மொத்த கோண உந்தம் (angular momentum) மாறாமல் இருக்க வேண்டும். பூமியின் உட்பகுதி இதே கொள்கையின்படி, பூமியின் திரவக் கருவின் வேகம் குறைவதால், அதைச் சுற்றியுள்ள திடப் பூமி வேகமாக சுழல்கிறது.எதிர்மறை லீப் விநாடி மற்றும் அதன் தாக்கம்பல பத்தாண்டுகளாக, பூமி மெதுவாகச் சுழன்று வருவதால், நாட்கள் சிறிதளவு நீளமாகி வருவதாக அறியப்பட்டது. சரிசெய்ய, ஒருங்கிணைந்த உலகளாவிய நேரம் (Coordinated Universal Time – UTC) உடன் அணு கடிகாரத்தை ஒத்திசைக்க ‘நேர்மறை லீப் விநாடிகள்’ (positive leap seconds) சேர்க்கப்பட்டன. 1972 ஆம் ஆண்டு முதல் இது 27 முறை நடந்துள்ளது. தற்போது பூமி வழக்கத்தை விட வேகமாகச் சுழல்வதால், அணு நேரத்தை சரிசெய்ய, ஒரு விநாடியை நீக்கும் ‘எதிர்மறை லீப் விநாடி’ (negative leap second) தேவைப்படலாம். இதுவரை இதுபோன்ற ஒரு நிகழ்வு நடந்தது இல்லை.தொலைத்தொடர்பு, நிதி பரிவர்த்தனைகள் மற்றும் ஜி.பி.எஸ் (GPS) செயற்கைக்கோள்கள் உட்பட பல உலகளாவிய அமைப்புகள் துல்லியமான நேரக் கணிப்பைச் சார்ந்துள்ளன. ஒரு எதிர்மறை லீப் விநாடி சேர்க்கப்பட்டால், அது Y2K பிரச்னை போன்ற இடையூறுகளுக்கு வழிவகுக்கலாம். இதனால், விஞ்ஞானிகள் நாட்கள் குறுகியவாதை மிக உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன