சினிமா
சின்னத்திரையின் அழகு தேவதை ஜனனி…!இன்ஸ்டாவில் கிளாமர் போஸ் வைரலாகும் போட்டோஸ்..!

சின்னத்திரையின் அழகு தேவதை ஜனனி…!இன்ஸ்டாவில் கிளாமர் போஸ் வைரலாகும் போட்டோஸ்..!
சிறந்த நடிப்பும், அழகான தோற்றத்தினாலும் தொலைக்காட்சிப் பார்வையாளர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ஜனனி அசோக். விஜய் டிவியில் ஒளிபரப்பான மாப்பிள்ளை என்ற தொடரின் மூலம் சின்னத்திரையில் முதன்முறையாக அறிமுகமான அவர், பின்னர் நாம் இருவர் நமக்கு இருவர், ஆயுத எழுத்து, மௌன ராகம், காற்றுக்கென்ன வேலி, செம்பருத்தி,இதயம் ஆகிய சீரியல்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.சீரியல் துறையில் குடும்பம் சார்ந்த கதாபாத்திரங்களில் பரிச்சயமான ஜனனி, வெள்ளித்திரையிலும் தன்னை நிரூபித்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் மற்றும் சந்தானம் நடித்த நண்பேன்டா படத்தின் மூலம் திரைதுறையில் அறிமுகமாகிய அவர், 2018ம் ஆண்டு வெளியான ஏமாளி திரைப்படத்திலும் நடித்துள்ளார்.சமூக ஊடகங்களில் அடிக்கடி ஆக்டிவாக இருக்கக்கூடிய ஜனனி, தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடர்ன் லுக்கில் சில கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். டிரெண்டி உடைகளில் நடத்திய இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று, லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ்களுடன் வைரலாகிக்கொண்டு இருக்கின்றன.