Connect with us

பொழுதுபோக்கு

சூர்யா பிறந்த நாள்; வாழ்த்து சொல்ல குவிந்த ரசிகர்கள் கூட்டம்: வைரல் வீடியோ!

Published

on

Surya Birth

Loading

சூர்யா பிறந்த நாள்; வாழ்த்து சொல்ல குவிந்த ரசிகர்கள் கூட்டம்: வைரல் வீடியோ!

நடிகர் சூர்யா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில், அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்க ரசிகர்கள் பலரும் அவரது வீட்டின் முன்பு திரண்டுள்ளனர். அவர்களுக்கு சூர்யா கைசைத்து மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ளும் வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் சூர்யா. நேருக்கு நேர் படம் தொடங்கி பல இயக்குனர்களுடன் இணைந்து வெற்றிப்படங்களை கொடுத்து வரும் சூர்யா சமீப காலமாக இளம் இயக்குனர்கள் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் வெளியான ரெட்ரோ படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருந்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது.முன்னதாக சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற படத்தில் நடித்திருந்தார். பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான கங்குவா திரைப்படம் வசூலில் பெரிய வீழ்ச்சியை சந்தித்தாலும், அடுத்தடுத்து படங்களில் நடித்து வெற்றிப்பாதைக்கு திரும்ப ஆயத்தமாகி வரும் சூர்யா அடுத்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கருப்பு என்ற படத்தில் நடித்துள்ளார். த்ரிஷா நாயகியாக நடித்துள்ள இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த படத்தை தொடர்ந்து அடுத்து தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடித்து வரும் சூர்யா, இன்று தனது 50-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு, இன்று காலை முதலே அவருக்கு வலைதளங்களில் ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், திரைத்துறை நட்சத்திரங்களும், தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, சூர்யாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்ல அவரது வீட்டின் முன்பு ரசிகர்கள் குவிந்துள்ளனர்.A post shared by Madurai_North_District_SFC (@madurai_north_district_sfc_)ரசிகர்களை சந்திக்க வந்த சூர்யா. அவர்கள் மத்தியில் கையசசைத்து வாழ்த்துக்களுக்கு நன்றி கூறியுள்ளார். இந்த வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், சூர்யா ரசிகர்கள் பலரும் இதனை ஷேர் செய்து வருகின்றனர். முன்னதாக, சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு, ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் அவர் நடித்துள்ள கருப்பு படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசைமைத்து வெளியான முதல் படத்தின் டீசர் இதுதான். இந்த டீசரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன