பொழுதுபோக்கு
டப்பிங் ஒழுங்கா வரல, திடீர்னு வயித்துலே குத்திட்டாரு; 2-3 டேக் போச்சு: விருமாண்டி அனுபவம் சொன்ன அபிராமி!

டப்பிங் ஒழுங்கா வரல, திடீர்னு வயித்துலே குத்திட்டாரு; 2-3 டேக் போச்சு: விருமாண்டி அனுபவம் சொன்ன அபிராமி!
தமிழ் சினிமாவில் ஒருசில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ள நடிகை அபிராமி, விருமாண்டி படத்தில் டப்பிங் பேசும்போது கமல்ஹாசன் தனது வயிற்றில் குத்தியதாக விளையாட்டாக கூறியுள்ளார்.கேரளாவை சேர்ந்த நடிகை அபிராமி கடந்த 1995-ம் ஆண்டு மலைாயளத்தில் வெளியான கதாபுருஷன் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானர். அதன்பிறகு 1999-ம் ஆண்டு சுரேஷ்கோபி நடிப்பில் வெளியான பத்ரம் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். தான் கல்லூரியில் படிக்கும்போதே சின்னத்திரையில் தொகுப்பாளியாக இருந்த அபிராமிக்கு பத்ரம் படம் பெரிய வெற்றியை கொடுத்தது.தொடர்ந்து அர்ஜூன் நடிப்பில் வெளியான வாணவில் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான அபிராமி, அதன்பிறகு தோஸ்த், சமுத்திரம், சார்ளி சாப்ளின், கார்மேகம், சமஸ்தானம் உள்ளிட்ட சில படங்களில் நாயகியாக நடித்திருந்தார். கடந்த 2004-ம் ஆண்டு கமல்ஹாசன் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான விருமாண்டி படம் அபிராமிக்கு பெரிய திருப்புமணையாக அமைந்தது.விருமாண்டி படத்திற்கு பின் குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்ட அபிராமி அங்கு வேலையும் செய்து வந்துள்ளார். தொடர்ந்து 2014-ம் ஆண்டு ராகுல் என்பரை திருமணம் செய்துகொண்ட அபிராமி அதே ஆண்டு மலையாளத்தில் ரீ-என்ட்ரி கொடுத்தார். அடுத்து ஜோதிகாவின் ரீ-என்டரி படமான 36 வயதினிலே படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்து தமிழிலும் ரீ-என்டரி ஆன அபிராமி விஸ்வரூபம் படத்தில் நடிகை பூஜா குமாருக்கு டப்பிங் பேசியிருந்தார்.சமீபத்தில் வெளியான கமல்ஹாசனின் தக் லைப் படத்தில் அவரின் மனவைியாக நடித்திருந்த அபிராமி, விருமாண்டி படத்தில் டப்பிங் பேசியபோது கமல்ஹாசன் தனது வயிற்றில் குத்தியதாக கூறியுள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டி ஒன்றில், விருமாண்டி படத்தில் டப்பிங் செய்யும்போது அவர் எனக்கு ஒரு டெக்னிக் சொல்லிக்கொடுத்தார். உன்னவிட பாடலுக்கு நடுவில் ஒரு காட்சி வரும். அந்த காட்சியில், அவர் நெஞ்சில் ஒரு கோடு இருக்கும் இதை பார்த்து மாட்டு சண்டையில் வந்ததா என்று கேட்பேன்.அப்போது அவர் வீரனுங்க வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம் என்று சொல்லிவிட்டால் அந்த காட்சி அப்படியே போகும். அந்த காட்சியில் நாங்கள் இருவரும் சுத்தி சுத்தி வந்து பெட் மேல விழணும். விழும்போது நான் ‘ஹப்பா’ என்று சொல்ல வேண்டும். இந்த காட்சி டப்பிங் செய்யும்போது அவர் பக்கத்தில் உட்கார்ந்திருந்தார். நான் டப்பிங் செய்கிறேன். என்ன செய்தாலும் எனக்கு அந்த ‘ஹப்பா’ மட்டும் வரவே இல்லை. 2-3 டேக் போச்சு அப்போவும் வரவில்லை.திடீரென்று அவர் இன்னொரு டைம் பண்ணு என்று சொன்னார். நானும் பேசும்போது எனது வயிற்றில் குத்தினார். அதன்பிறகு இப்போ வந்துச்சில்ல ஹப்பா என்று சொன்னார். அப்போது நான் பேசிய டப்பிங் ஓகே ஆகிவிட்டது என்று அபிராமி கூறியுள்ளார்.