Connect with us

சினிமா

தினமும் சண்டை…குழந்தை மட்டும் பிறந்துவிட்டால்!! பிரபல நடிகை ஓபன் டாக்

Published

on

Loading

தினமும் சண்டை…குழந்தை மட்டும் பிறந்துவிட்டால்!! பிரபல நடிகை ஓபன் டாக்

பாலிவுட் சினிமாவில் டாப் இயக்குநராகவும் நடிகராக திகழ்ந்து வருபவர் தான் அனுராக் காஷ்யப். தமிழில் இமைக்கா நொடிகள், லியோ, மகாராஜா, விடுதலை 2 உள்ளிட்ட படங்களில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். ஆர்த்தி பஜாஜ் என்பவரை திருமணம் செய்து 12 ஆண்டுகளுக்கு பின் விவாகரத்து பெற்று பிரிந்தார்.அதன்பின் 2 ஆண்டுகள் கழித்து நடிகை கல்கி கோய்ச்லின் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவருடன் சில ஆண்டுகள் வாழ்ந்த அனுராக், கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று 2015 பிரிந்தார்.கல்கி கடந்த ஆண்டு Guy Hershberg என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சமீபத்தில் கல்கி அளித்த பேட்டியொன்றில் சில விஷயங்களை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.அதில், என் பெற்றோர்கள் மாறிமாறி சண்டைப்போட்டு அவர்களது வாழ்க்கையை அழித்துக்கொண்டனர். இவர்கலுடைய சண்டையால் 13 வயதில் இருந்தே எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டு வந்தது. வாழ்க்கையும் கேள்விக்குறியானது.அதன்பின் என் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு அவர்கள் பிரிந்து நன்றாகவே வாழ்ந்தார்கள். நானும் என் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு முன்னேறினேன். என் பெற்றோரின் சண்டை, என் சிறு வயது மன உளைச்சல்கள் என் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது.எனக்கு திருமணமான சில நாட்களிலேயே எனக்கும் அனுராக்கிற்கும் சண்டை நாளுக்கு நாள் அதிகரித்தது. எனது சிறுவயது மன அழுத்த நாட்கள் எல்லாம் என் கண் முன்னே வந்து போனது. எனக்கு குழந்தை பிறந்தால் அந்த வாழ்வு கேள்விக்குறியாகிவிடும் என்று தோன்றியதால் அதை மனதில் வைத்து விவாகரத்து செய்தேன் என்று கல்கி கோய்ச்லின் தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன