சினிமா
பிக்பாஸ் ஜனனியின் லெஹங்கா லுக்.. இன்ஸ்டாவில் குவியும் ஹார்டின்கள்..!

பிக்பாஸ் ஜனனியின் லெஹங்கா லுக்.. இன்ஸ்டாவில் குவியும் ஹார்டின்கள்..!
விஜய் டி.வி.யில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் தனது கொஞ்சும் இலங்கைத் தமிழால் பல ரசிகர்களை கவர்ந்தவர் தான் ஜனனி. பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து தளபதி விஜய் உடன் லியோ படத்திலும் நடித்தார். அதில் சின்ன ரோல் தான் என்றாலும் அவருக்கு நல்ல பாராட்டுகளும் கிடைத்தது.இதனிடையே, தற்போது ஜனனி கோலிவுட் திரையுலகிலும் ஹீரோயினாக நடிக்க தொடங்கி இருக்கிறார். டீஜே அருணாச்சலம் ஜோடியாக ‘உசுரே’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.இதேவேளை சோஷியல் மீடியாவில் அவ்வப்போது ரசிகர்களை கவரும் விதமாக போட்டோக்களை வெளியிட்டு வரும் ஜனனி, தற்போது பச்சை நிற லெஹங்கா உடையில் போட்டோசூட் படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அந்த வகையில் ஜனனி தற்போது வெளியிட்டுள்ள க்யூட் போட்டோஸ் இன்ஸ்டா பக்கத்தில் ஹார்டின்களை குவித்து வருகின்றது.இதேவேளை ஜனனியின் ரசிகர்கள் க்யூட் போட்டோஸ் பார்த்து ‘நிஜமான தேவதைமாதிரி இருக்கீங்க!’ என்று கமெண்ட்களில் புகழ்ந்து வருகின்றனர்.