பொழுதுபோக்கு
மானம், மரியாதை முக்கியம்; பிச்சை எடுக்கலாம், ஆனா அந்த காசு தேவையில்ல: வடிவேலுவுடன் நடிக்க விரும்பாத சோனா சொன்ன உண்மை!

மானம், மரியாதை முக்கியம்; பிச்சை எடுக்கலாம், ஆனா அந்த காசு தேவையில்ல: வடிவேலுவுடன் நடிக்க விரும்பாத சோனா சொன்ன உண்மை!
‘குசேலன்’ திரைப்படத்தில் வடிவேலுவுடன் இணைந்து பணியாற்றியது குறித்து நடிகை சோனா பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். மிஸ் வாவ் தமிழா யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகையாக வலம் வந்தவர் சோனா. குறிப்பாக, பூவெல்லாம் உன் வாசம், ஷாஜகான், சிவப்பதிகாரம், மிருகம், குசேலன் போன்ற படங்களில் இவர் நடித்திருக்கிறார். இது தவிர கனிமொழி என்ற திரைப்படத்தையும் நடிகை சோனா தயாரித்தார். இப்படத்தில் நடிகர் ஜெய் கதாநாயகனாக நடித்தார். இந்நிலையில், சமீபத்திய நேர்காணலில் தனது திரை அனுபவம் குறித்து சில விஷயங்களை நடிகை சோனா மனம் திறந்து பகிர்ந்து கொண்டார்.அந்த வகையில் “தமிழ்நாட்டை பொறுத்தவரை இதுவரை எந்த அரசியல்வாதியிடம் இருந்தும் எனக்கு பிரச்சனை வந்தது கிடையாது. ஆனால், ஆந்திராவில் எனக்கு அத்தகைய பிரச்சனைகள் நடந்திருக்கிறது. அதன் பின்னர், அங்கிருந்து தப்பித்து வரும் வரை எனக்கு மிகுந்த பயமாக இருந்தது.’குசேலன்’ திரைப்படத்தில் ரஜினிகாந்த், பிரபு, மனோபாலா, சந்தான பாரதி, பசுபதி, மீனா, பி. வாசு ஆகியோருடன் இணைந்து பணியாற்றியது நல்ல அனுபவமாக இருந்தது. அங்கிருந்த அனைவரும் சினிமா துறையில் பல ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தவர்கள். காமெடி கதாபாத்திரத்தில் நான் நடித்தது அதுவே முதல்முறை. வடிவேலு ஒரு சிறந்த நகைச்சுவை கலைஞர் என்பது உலகத்திற்கே தெரியும்.ஆனால், அவருடைய குணத்திற்கும், எனக்கும் செட்டாகவில்லை. ‘குசேலன்’ திரைப்படம் வர்த்தக ரீதியாக பெரும் வரவேற்பை பெறவில்லை. எனினும், அப்படத்தின் காமெடி காட்சிகள் இன்று வரை பேசப்படுகிறது. அதற்கு பின்னரும் வடிவேலுவுடன் இணைந்து பணியாற்ற பல வாய்ப்பு கிடைத்தது. ஆனால், நான் மறுத்துவிட்டேன். எனக்கு மானம், மரியாதை முக்கியம். பிச்சை எடுக்கலாம், ஆனால் அந்த பணம் தேவையில்லை என்ற முடிவில் இருந்தேன். வடிவேலு ஒரு சிறந்த நடிகர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. தனிப்பட்ட ஒரு நபராக அவர் குறித்து கருத்து கூற நான் விரும்பவில்லை” என்று நடிகை சோனா தெரிவித்துள்ளார்.