Connect with us

சினிமா

ரவி மோகனுக்கு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு! தீவிரமடைந்த 6 கோடி விவகாரம்.. முழுவிபரம் இதோ!

Published

on

Loading

ரவி மோகனுக்கு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு! தீவிரமடைந்த 6 கோடி விவகாரம்.. முழுவிபரம் இதோ!

தமிழ் சினிமா உலகில் பரவலாக அறியப்பட்ட நடிகர் ரவி மோகன் தற்போது ஒரு கடுமையான சட்ட சிக்கலில் சிக்கியுள்ளார். இவர், ஒரு தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து 6 கோடி ரூபாய் முன்பணமாக பெற்றபோது, அதற்கான ஒப்பந்த படங்களில் நடிக்கவில்லை என்பதால் இந்த விவகாரம் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை ‘பாபி டச் கோல்ட் யுனிவர்சல்’ என்ற தயாரிப்பு நிறுவனம் பதிவு செய்தது. அதில், நடிகர் ரவி மோகன் அவர்களிடம் இரண்டு படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டு, மொத்தம் 15 கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்டதில் 6 கோடி முன்பணமாக பெற்றதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், அந்த பணத்தை அவர் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்திற்காக பயன்படுத்திவிட்டதாகவும், அந்த படங்களில் நடிக்கவில்லை என்றும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.இதனால், தற்போது ரவி மோகன் தயாரித்து வரும் ‘ப்ரோ கோட்’ என்ற படத்திற்கும், அவர் வேறு எந்த புதிய படத்திலும் நடிக்கக்கூடாது என தடை விதிக்க வேண்டுமென கோரி நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டது.இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி வழக்கை ஜூலை 23ஆம் தேதி ஒத்திவைத்தார். இன்று இரு தரப்புகளின் வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஒரு அதிரடி தீர்ப்பை அறிவித்தார்.ரவி மோகன் 6 கோடி ரூபாய் முன்பணமாக பெற்றது உறுதியானதால், அதற்கான பாதுகாப்பு நடவடிக்கையாக, சுமார் 5.9 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்களை 4 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மேலும், இந்த தயாரிப்பு நிறுவனத்துடன் ஏற்பட்ட நிதி மற்றும் ஒப்பந்தக் குழப்பங்களை தீர்க்க ஒரு தனி மத்தியஸ்தரை நியமிக்கவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன