பொழுதுபோக்கு
ரொம்ப அநியாயம் பண்றீங்க சார்; இது எனக்கு பிடிக்கல… எவர்கிரீன் பாடலை மறுத்த ரஞ்சிதா: எந்த பாடல் தெரியுமா?

ரொம்ப அநியாயம் பண்றீங்க சார்; இது எனக்கு பிடிக்கல… எவர்கிரீன் பாடலை மறுத்த ரஞ்சிதா: எந்த பாடல் தெரியுமா?
அர்ஜூன் படத்தில் இடம் பெற்ற ஹிட் பாடலை வேண்டாம் என்று கூறியதாகவும், பிறகு, சமாதானப்படுத்தி படத்தில் சேர்த்த்தாகவும் கூறியுள்ள நடிகை ரஞ்சிதா, இந்த பாடல் தனக்கு பிடிக்காத பாடல் என்று கூறியுள்ளார்.தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், உள்ளிட்ட பல திறமைகளை உள்ளடக்கிய ஒரு நட்சத்திரம் அர்ஜூன். பல தேசப்பற்று படங்களில் நடித்து வெற்றிகளை கண்டுள்ள இவர், கடந்த 1995-ம் ஆண்டு நடித்த படம் கர்ணா. ரஞ்சிதா, வினிதா, கவுண்டமணி, செந்தில், ரவிச்சந்திரன், மேஜர் சுந்தர்ராஜன், சுஜாதா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு, வித்யாசாகர் இசையமைத்திருந்தார். படத்தின் அனைத்து பாடல்களும் பெரிய ஹிட்டாக அமைந்தது.குறிப்பாக இந்த படத்தில் இடம் பெற்ற “மலரே மௌனமா” என்ற பாடல் இன்றும் பலரின் ரிங்டோனாக ஒலித்துக்கொண்டிருக்கிறது. வைரமுத்து எழுதிய இந்த பாடலை எஸ்.பி.பாலசுப்பிரமணியன், எஸ்.ஜானகி ஆகியோர் இணைந்து பாடியிருந்தனர். ஆனால் இந்த பாடலை முதலில் தான் விரும்பவில்லை என்று அந்த பாடலில் நடித்த நடிகை ரஞ்சிதா ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இது குறித்து அவர் பேசுகையில்,ஒருமுறை காரில் செல்லும்போது இதைக் கேளுங்கள் என்று சொல்லி, இந்த பாடலைப் பாடிக்காட்டினார். அது மிகவும் மெதுவான பாடல். அந்தப் படத்திலேயே எனக்கு ஒரே ஒரு பாடல் மட்டும்தான். அதுதான் நான் “நீங்கள் மிகவும் அநியாயம் செய்கிறீர்கள். எனக்கு ஒரே ஒரு பாடல், அதுவும் இவ்வளவு மெதுவாக இருக்கிறது,” என்று தோன்றியது. அந்த பாடல் மிகவும் போரடித்தது.முதலில் கேட்டபோது, அவர், “உண்மையில், நான் இந்தப் பாடலை ‘ஜெய்ஹிந்த்’ படத்திற்காகப் பதிவு செய்திருந்தேன். அந்தப் படத்திற்கு இடம் இல்லாததால், இந்தப் படத்தில் இந்த பாடலைச் சேர்த்தேன். நீ பார், இந்தப் பாடல் ஒரு சூப்பர் ஹிட் ஆகும்,” என்று கூறினார். ஆனால், அது என்னைச் சமாதானப்படுத்த அவர் சும்மா சொன்னது போல் தோன்றியது. அங்கிருந்து வேறு ஒரு படப்பிடிப்பிற்குச் சென்றேன். ஒரு மாதம் கழித்து படப்பிடிப்பு, இந்தப் பாடலுக்கானது. எனக்கு ஒரு கேசட் கொடுத்தார்.ஒரு மாதம் முழுவதும் பாடலைக் கேட்டு, முழுவதும் மனப்பாடம் செய்து, அங்கேயே குளுமணலில் படமாக்கினோம். கட்டாயப்படுத்தி நடித்தேன் நடிப்பது போன்ற உணர்வே வரவில்லை. பாடலைக் கேட்டுக்கொண்டே இருந்ததால், அந்த உணர்வும் அசைவுகளும் என்னுடள் வாங்கிக்கொண்டேன் ஆனால் அந்தப் பாடலில் நடிப்பது போன்ற ஒரு உணர்வே இல்லை என்று ரஞ்சிதா கூறியுள்ளார். ஆனால் இந்த பாடல் பெரிய ஹிட்டடித்து காலம் கடந்தும் நிலைத்திருக்கிறது.