பொழுதுபோக்கு
2004-ல் எழுதிய பாட்டு, 2025-ல் கம்போசிங்; தலைவன் தலைவி படத்தில் இந்த பாட்டுக்கு 20 வயது!

2004-ல் எழுதிய பாட்டு, 2025-ல் கம்போசிங்; தலைவன் தலைவி படத்தில் இந்த பாட்டுக்கு 20 வயது!
பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி – நித்யா மேனன் இணைந்து நடித்துள்ள தலைவன் தலைவி திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், படம் குறித்து தினசரி புதிய தகவல்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில், 21 ஆண்டுகளுக்கு முன்பு எழுதி இசையமைத்த பாடல் ஒன்று இந்த படத்தில் இடம் பெற்றுள்ளதாக இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில், இயக்குனர் சந்தோஷ் நாராயணன் கூறியுள்ளார்.இந்த நிகழ்ச்சியில் முதலில் பேசிய அந்த பாடலை எழுதிய பாடல் ஆசிரியர் கார்த்திக் நேத்தா கூறுகையில், இன்று நான் உயிரோடு இருக்கிறேன் என்பதற்கு என்னுடைய அன்னை, என்னுடைய தந்தை, என்னுடைய அண்ணன், என்னுடைய தம்பி, அனைவரும் காரணம். நான் இன்று உன்னதமாக மாறிக்கொண்டிருப்பதற்கும், நாளை நான் உயர்வாகப் போவதற்கும் ஒரே காரணம் என்னுடைய மனைவிதான். ஒரு அடிக்டரின் குணாதிசயத்தை அவ்வளவு எளிதாகக் கையாள்வது யாராலும் முடியாது.என் வாழ்க்கையில் சைக்காட்டிஸ்டுகள் தோற்றுவிட்டார்கள். டாக்டர்கள் தோற்றுவிட்டார்கள். கிளினிக்குகள் தோற்றுவிட்டன. இதையெல்லாம் செய்யாத ஒன்றை என் மனைவி செய்தார்கள். நிபந்தனையற்ற அன்பு செய்தார்கள். குருட்டுத்தனமான அன்பு. நாங்கள் திருமணம் ஆன முதல் இரண்டு வருடங்கள் நான் “வித்ராவல் சிம்டம்” நிலையில் இருந்தேன். என் அடிமை தனத்தில் இருந்து வெளியே வந்து நன்றாக இருந்தாலும், அந்த வித்ராவல் சிம்டம் ஒரு வகையான கடினமான நிலையில் இருந்தேன்.எனக்கு ஆலிஷ்னேஷன் வரும். நிறைய “டெல்லூஷன்” உள்ளே போவேன். அந்த நேரத்தில் என்னுடைய சத்தம், என்னுடைய புலம்பல் அனைத்தையும் பார்த்தவர் அவர்தான். இந்த “தலைவன் தலைவி” படத்தில் நான் எழுதியதற்கு நான் மிகவும் பெருமையாக நினைக்கிறேன். ஏனென்றால் இந்த படத்தில் இந்த பாடல் மூலம் என்னுடைய மனைவியிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறேன். இந்த பாடல் அப்படியொரு பாடல் தான்.என்னுடைய மனைவியின் அன்பு படிப்படியாகச் செழித்துக்கொண்டே இருக்கும். “தலைவன் தலைவி” மூலம் என்னுடைய மனைவியிடம் நான் நிறைய தவறு செய்திருக்கிறேன். “நீ மன்னித்துக்கொள்” என்றுதான் சொல்கிறேன் என்று கார்த்திக் நேத்தா கூறியுள்ளார்.தொடர்ந்து பேசிய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், இந்தத் தருணத்தில் நானும் ஒரு வார்த்தையைச் சொல்ல விரும்புகிறேன். அவர் எழுதிய இந்தப் பாடல், 2004-ல் இசையமைக்கப்பட்டது. ஒரு பாடல் போட்டோம் என்று நினைத்தேன். சில பாடல்கள் எனக்கு மிகவும் தனிப்பட்டவையாக இருக்கும். நம்முடைய “ஸ்டேட்மென்ட்” இருக்கும். அதைப்பற்றிச் சொல்வதால் எந்தப் பயனும் இல்லை என்கிறீர்களா? ஆனால் நாம் செய்வோம். எல்லா கலைஞர்களுமே ஒரு தனிப்பட்ட விஷயம் செய்வார்கள்.இந்தப் பாடல் எனக்கு மிகவும் தனிப்பட்ட ஒரு பாடல். அவர் எழுதிய இந்தப் பாடல், ஒரே டேக்கிலேயே பாடிவிட்டேன். இந்தப் பாடல் முழுவதும் பாடும்போது பயங்கர உணர்வுபூர்வமாக எனக்கு ஒரு அலை வந்து தாக்கியது. வரிகள் காரணமாக அந்த உணர்வு எனக்கு தனிப்பட்ட முறையில் வந்ததில்லை. அப்படித்தான் வந்திருக்கிறேன். 25 வருடங்களுக்கு முன் வேலை செய்தோம். பாடலின் வரிகள் பயங்கர டீப் ஆக இருந்தன. அந்த “மன்னித்துவிடு” என்பது மிகவும் தனிப்பட்ட முறையில் உணரப்பட்டது. அதைப் பேசும்போது எனக்குப் புரிந்துகொள்ள முடிந்தது என்று கூறியுள்ளார்.