விளையாட்டு
IND vs ENG LIVE Score 4th Test, Day 1: முதல் நாளில் இந்தியா ஆதிக்கம்: ஜெய்ஸ்வால் – ராகுல் அபார ஆட்டம்!

IND vs ENG LIVE Score 4th Test, Day 1: முதல் நாளில் இந்தியா ஆதிக்கம்: ஜெய்ஸ்வால் – ராகுல் அபார ஆட்டம்!
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணமாக சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் லீட்சில் நடந்த முதலாவது போட்டியில் இங்கிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ந்து பர்மிங்காமில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 336 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.இதனைத் தொடர்ந்து லண்டனில் நடந்த 3-வது டெஸ்டில் 22 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இதனால், தொடரில் 2 – 1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராப்போர்டில் இன்று மாலை 3:30 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. இந்திய அணியில் 3 மாற்றம் இங்கிலாந்து அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் ஆடிய அணியில் இருந்து 3 மாற்றங்கள் செய்யப்பட்டு இருப்பதாக கேப்டன் சுப்மன் கில் தெரிவித்தார். அதன்படி, கருண் நாயருக்கு பதிலாக சாய் சுதர்சன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதேபோல், காயமடைந்த ஆகாஷ் தீப் மற்றும் நிதிஷ் குமார் ரெட்டிக்கு பதிலாக அன்ஷுல் காம்போஜ் மற்றும் ஷர்துல் தாக்கூர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.முதல் நாள் ஆட்டம் – டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், பவுலிங் போடுவதாக அறிவித்தார். இதனையடுத்து, சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடுகிறது. இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் டாஸ் வென்று முதலில் பந்துவீசிய நிலையில், இந்திய அணியில் தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் – கே.எல். ராகுல் களமிறங்கி மட்டையைச் சுழற்றினர். இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 58 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 18 ரன்களுடனும் (49 பந்துகள்) மற்றும் கே.எல். ராகுல் 32 ரன்களுடனும் (59 பந்துகள்) களத்தில் உள்ளனர். கே.எல். ராகுல் இந்த தொடரில் சிறப்பான ஃபார்மில் இருமுறை சதம் அடித்து தனது ஆதிக்கத்தை நிரூபித்துள்ளார்.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கவும்இரு அணி வீரர்களின் பிளேயிங் லெவன் பின்வருமாறு: இந்தியா: யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், சாய் சுதர்சன், சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், அன்ஷுல் கம்போஜ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்இங்கிலாந்து: ஜாக் க்ராலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி ஸ்மித் (விக்கெட் கீப்பர்), லியாம் டாசன், கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர்