இலங்கை
அடுத்த வருடமே மாகாணத் தேர்தல்; பின்வாங்கியது திசைகாட்டி அரசாங்கம்

அடுத்த வருடமே மாகாணத் தேர்தல்; பின்வாங்கியது திசைகாட்டி அரசாங்கம்
2026ஆம் ஆண்டின் ஆரம்பத்திலேயே மாகாணசபைத் தேர்தல்கள் இடம்பெறும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
தேசிய ஒற்றுமையையும் சமத்துவத்தையும் கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கைகள்மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்காக ‘இலங்கையர் தினம்’ கொண்டாடப்படவுள்ளது. இலங்கையர் தினத்தை எதிர்வரும் 23ஆம் திகதி நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தேசிய சமத்துவத்தைக் கட்டியெழுப்புவதற்கான பயணத்தில் புதியதொரு ஆரம்பமாக இலங்கையர் தின நிகழ்வு அமையும். அடுத்த வருடம் ஆரம்பத்தில் மாகாணசபைத் தேர்தலை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் மாற்றுக்கருத்துக்கள் இல்லை என்றார்.
இந்த வருடம் தேர்தல் வருடம் என்றும், உள்ளூராட்சித் தேர்தல் மற்றும் மாகாண சபைத்தேர்தல் என்பன இவ்வருடத்துக்குள் நடத்தி முடிக்கப்படும் என்றும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னர் அறிவித்திருந்தது. உள்ளூராட்சித் தேர்தலில் அரசாங்கத்துக்கு பின்னடைவு ஏற்பட்டமையைத் தொடர்ந்தே மாகாணசபைத் தேர்தலை பிற்போட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.