இலங்கை
அதிகரிக்கும் சிக்குன்குனியா – உலக சுகாதார அமைப்பு எச்சரிகை!

அதிகரிக்கும் சிக்குன்குனியா – உலக சுகாதார அமைப்பு எச்சரிகை!
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பரவியது போல் இந்தியா உட்பட, இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் உள்ள நாடுகளில் சிக்குன்குனியா நோய் பரவல் அபாயம் காணப்படுவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
குறித்த நோய்ப் பரவல் தற்போது ஐரோப்பா உட்பட பிற பகுதிகளிலும் பரவி வருவதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இந்த வைரஸால் பாதிக்கப்படும் அபாயத்தில் 119 நாடுகள் உள்ளதுடன், சுமார் 5.6 பில்லியன் மக்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த 2004-2005 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் சிக்குன்குனியா ஒரு தொற்றுநோயாகப் பரவியது.
இதன்போது சுமார் 500,000 பேர் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.