பொழுதுபோக்கு
ஆம்பளைக்கு நோ டிக்கெட்; பெண்கள் மட்டும் வாங்க: 93-ல் ரிலீஸ் ஆன இந்த படத்துக்கு இப்படி ஒரு மவுசா?

ஆம்பளைக்கு நோ டிக்கெட்; பெண்கள் மட்டும் வாங்க: 93-ல் ரிலீஸ் ஆன இந்த படத்துக்கு இப்படி ஒரு மவுசா?
தமிழ் சினிமாவில் குடும்ப படங்களை இயக்கி வெற்றி கண்ட இயக்குனர் வி.சேகர் இயக்கிய ஒரு படம் ரிலீஸ் ஆன போது பெண்கள் கூட்டம் அலைமோதியதால், ஆண்களுக்கு டிக்கெட் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த படத்தில் சிவக்குமார் – பானுப்பிரியா இணைந்து நடித்திருந்தனர். படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்துது.1990-ம் ஆண்டு வெளியான நீங்களும் ஹீரோதான் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் தான் வி.சேகர். நிழல்கள் ரவி, சில்க் ஸ்மிதா, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருந்த இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிப்படமாக அமைந்துது. அதன்பிறகு, நான் புடிச்ச மாப்பிள்ளை, ஒன்னா இருக்க கத்துக்கணும், வரவு எட்டனா செலவு பத்தனா, காலம் மாறிப்போச்சு உள்ளிட்ட பல படங்களை இயக்கி வெற்றி கண்டார்.தான் இயக்கிய முதல் 7 படங்களில் 6 படங்கள் கவுண்டமணி செந்தில் காம்போவை வைத்து காமெடியில் கலக்கி இருப்பார் வி.சேகர். பெரும்பாலும் இவர் இயக்கிய படங்கள் பெண்களுக்கும், குடும்பத்தற்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும். முதல் படம் இயக்கியபோது தன்னை புரட்சி இயக்குனர் என்றும், அடுத்தடுத்த படங்களை பார்த்தவர்கள் இவர் குடும்ப இயக்குனர் என்றும் அழைத்தனர். ஆனால் இந்த படத்தை இயக்கியதால் பெண்களின் இயக்குனர் என்று சொன்னதாக வி.சேகர் கூறியுள்ளார்.லிட்டில் டாக்கீஸ் யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், இயக்குனர் பாக்யராஜ், என்னோட உதவியாளர்கள் எல்லாம் அவரவர் ஹீரோவாக பணம் பண்றாங்க. என்னை வைத்து யாரும் படம் எடுக்கவில்லை. நீ என்னை ஹீரோவா போட்டு படம் என்று சொன்னார். நான் அவரிடம் இந்த கதையை சொன்னேன். கதை நல்லா இருக்கு. ஆனால் க்ளைமேக்ஸை எனக்கு தகுந்தார்போல் கொஞ்சம் மாற்று என்று சொன்னார். ஆனால் க்ளைமேக்ஸை மாற்றினால் கதை கெட்டுவிடும் என்று நான் மறுத்துவிட்டேன்.அதன்பிறகு நடிகர் சிவக்குமாரிடம் கதை சொன்னேன். அவர் நான் ஹீரோவாக நடிச்சி 10 வருஷம் ஆச்சுபா என்னை ஹீரோவா ஏத்துக்குவாங்களா என்று கேட்க, அதை நான் பார்த்துக்கொள்கிறேன் நீங்க வாங்க என்று சொன்னேன். அதன்பிறகு கதையில் சிவக்குமாருக்காக, அவர் நீண்டகாலமாக கல்யாணம் வேண்டாம் என்று சொல்லிக்கொண்டு இறுதியில் கல்யாணம் செய்துகொண்டதாக மாற்றினேன். இதை பாக்யராஜூவிடம் சொன்னபோது இது சரியாக வருமா என்று அவருக்கும் சந்தேகம். ஆனால் நான் உறுதியாக இருந்து படத்தை எடுத்து முடித்துவிட்டேன்.படம் ரிலீஸ் ஆனவுடன் படத்தை பார்த்த பாக்யராஜ் நான் திரைக்கதை தான் ஆனால் நீ கதாசிரியர் என்று நிருப்பிச்சிட்யா என்று சொன்னார். அந்த படம் தான் பொறந்தவீடா புகுந்த வீடா. இந்த படம் வெளியான சமயத்தில், பாண்டி பஜாரில் நாகேஷ் தியேட்டர்னு நினைக்கிறேன், தியேட்டரில் படம் வெளியாகி 2-வது வாரத்தில் ஒரு ஆபீசர் எனக்கு போன் செய்து, குடும்பத்துடன் படம் பார்க்க வந்தேன். பெண்களுக்கு மட்டம் டிக்கெட் கொடுக்கிறான் நான் கேட்ட தரல நீங்க கேட்க மாட்டீங்களா என்று கேட்டார்.பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து படத்தை எடுத்ததால், அந்த படத்திற்கு பெண்கள் கூட்டம் அலைமோதியது. ரொம்ப தூரத்தில் இருந்து வந்ததால், பெண்களுக்கு மட்டும் தான் டிக்கெட் மீதி இருந்தால் தான் ஆண்களுக்கு என்று சொல்லிவிட்டார்கள். அப்போது 90 சதவீதம் பெண்கள் படம் பார்த்துள்ளனர் என்று வி.சேகர் கூறியுள்ளார்.