இந்தியா
ஆரோவில் வளர்ச்சிக்கு சென்னை ஐ.ஐ.டி ஆதரவு: மாத்திர்மந்திர் ஏரி திட்டத்திற்கும் சிறப்பு கவனம்

ஆரோவில் வளர்ச்சிக்கு சென்னை ஐ.ஐ.டி ஆதரவு: மாத்திர்மந்திர் ஏரி திட்டத்திற்கும் சிறப்பு கவனம்
சென்னை ஐ.ஐ.டி-லிருந்து உயர்மட்ட பிரதிநிதிகள் குழு புதன்கிழமை (23.07.2025) ஆரோவில்லுக்கு வருகை தந்து, ஆரோவில் அறக்கட்டளை கல்வி அமைச்சகத்துடன் இணைந்து ஒரு புதிய வளாகத்தை கட்ட திட்டமிட்டுள்ளனர். சென்னை ஐ.ஐ.டி-யிலிருந்து வருகை தந்த குழுவில் பேராசிரியர் ரஜ்னிஷ் குமார், பேராசிரியர் ராபின்சன் மற்றும் இயக்குநர் டாக்டர் வி. காமகோடி ஆகியோர் வந்தனர். அவர்களை ஆரோவில் அறக்கட்டளையின் பிரதிநிதிகள் வரவேற்றனர்.டாக்டர் ஜி.சீதாராமன், டாக்டர் வேணுகோபால் ஆரோவில் நகர அபிவிருத்தி கவுன்சிலின் (ATDC) சிந்துஜா அந்திம் எஸ் ஆகியோர் ஐ.ஐ.டி இருந்து வந்த குழுவினரிடம் ஆலோசன நடத்தினர்.ஆரோவில் வளாகத்தில், புதுச்சேரி மற்றும் பரந்த உயிர்-பிராந்தியத்திலிருந்து வளர்ந்து வரும் தொடக்க நிறுவனங்களுக்கு குறிப்பிடத்தக்க ஊக்கத்தை வழங்கும்,” என்று டாக்டர் ஜி. சீதாராமன் கூறினார்.ஐ.ஐ.டி இயக்குநர் டாக்டர் காமகோடி வளாகத்தின் சிறப்பு கவன பகுதிகளை விவரித்து, “பசுமை எரிசக்தி தீர்வுகள் மற்றும் மின்சார வாகனங்கள், குறிப்பாக வணிக பயன்பாடுகள் அதிக சுமை தாங்கிகளுக்கான தீர்வுகளில் கவனம் செலுத்தப்படும்.” என்றார்.ஆரோவில் நியூ ஈரா மேல்நிலைப் பள்ளியின் 6-ம் வகுப்பு மாணவி அனிஷா, டாக்டர் காமகோடிக்கு கையால் செய்யப்பட்ட பையை வழங்கினார். மாணவியை ஊக்குவித்து, “உங்கள் பள்ளிப் படிப்பு முடிந்ததும் விரைவில் ஐ.ஐ.டி-யில் சேருங்கள்” என்று கூறினார்.சென்னை ஐ.ஐ.டி இயக்குநர் டாக்டர் காமகோடி புகழ்பெற்ற மாத்திர்மந்திர் மற்றும் மாத்திர்மந்திர் ஏரி திட்டத்தையும் பார்வையிட்டார். திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடனான விவாதங்களைத் தொடர்ந்து, டாக்டர் காமகோடி “மாத்திர்மந்திர் ஏரி திட்டத்திற்கு சென்னை ஐ.ஐ.டி-லிருந்து முழு தொழில்நுட்ப ஆதரவு கொடுக்கப்படும் என தெரிவித்தார்.டாக்டர் சீதாராமன் மேம்பட்ட கல்வி ஆதரவுக்கான திட்டங்களை அறிவித்து, “வரும் நாட்களில் ஆரோவில் பள்ளிகளில் மாணவர்கள் ஐ.ஐ.டி, என்.ஐ.டி அல்லது ஐ.ஐ.ஐ.டி கல்லூரிகளில் சேர்க்கை பெற உதவுவதற்காக சிறப்பு பயிற்சி நடத்தப்படும்” என்று கூறினார்.இந்த ஒத்துழைப்பு ஆரோவில் பிராந்தியத்தில் நிலையான தொழில்நுட்ப கல்வியை சமூக அபிவிருத்தியுடன் ஒருங்கிணைப்பதற்கான குறிப்பிடத்தக்க படியாகும். இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான சென்னை ஐ.ஐ.டி, ஆரோவில் அறக்கட்டளை மற்றும் கல்வி அமைச்சகத்திற்கு இடையேயான இந்த கூட்டாண்மை, நிலைத்தன்மை மற்றும் பசுமை தொழில்நுட்பத்தில் புதுமைக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தொழில்நுட்பங்களில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான மையமாக செயல்படும், உள்ளூர் மாணவர்களுக்கு கல்வி வழிகளை வழங்கி, பிராந்தியத்தில் சுற்றுச்சூழல் நிறுவனங்களின் வளர்ச்சியை ஆதரிக்கும்.