சினிமா
இசையமைப்பாளர் சாய் அபயங்கரை பாராட்டிய விஜய் ஆண்டனி..! வைரலாகும் வீடியோ…!

இசையமைப்பாளர் சாய் அபயங்கரை பாராட்டிய விஜய் ஆண்டனி..! வைரலாகும் வீடியோ…!
இன்றைய தமிழ் திரைப்பட உலகத்தில் புதியவர்களுக்கு வாய்ப்புகள் விரிந்து வருகின்றன. அந்த வரிசையில், இசையமைப்பாளர் சாய் அபயங்கர், எந்த ஒரு திரைப்படமும் வெளியாகாமல் இருப்பினும், தொடர்ச்சியாக பெரிய பட்ஜெட் படங்களில் ஒப்பந்தமாகி வருவது குறித்து பலரும் ஆச்சரியமும் விமர்சனமும் தெரிவித்துள்ளனர்.இது குறித்த கேள்விக்கு இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி அளித்த பதில் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.”அவரும் தரமுள்ளவர் தான் வரவேற்கவேண்டும்,” என்ற அவர், “எனக்கும் ஆரம்பத்தில் யாரும் வாய்ப்பு கொடுக்கவில்லை . மியூசிக்கே தெரியாம மியூசிக் டைரக்டர் ஆகிட்டேன். அவர் திறமையோட வந்திருக்காரு, அதனால் எல்லோரும் அவரை இசையமைக்க அழைக்கின்றார்கள் என தெரிவித்துள்ளார்.விஜய் ஆண்டனியின் இந்த நேர்மையான பதில், சினிமாவில் புதிய திறமைகளுக்கான ஆதரவை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய கருத்தாக வைரலாகி வருவதுடன் ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.