இலங்கை
இலங்கை – இந்திய கப்பல் சேவை இந்த ஆண்டில் 17,000 பேர் பயணம்

இலங்கை – இந்திய கப்பல் சேவை இந்த ஆண்டில் 17,000 பேர் பயணம்
இலங்கை – இந்தியா இடையிலான பயணிகள் கப்பல் சேவை ஊடாக இந்த ஆண்டில் இதுவரை சுமார் 17 ஆயிரம் பேர் பயணித்துள்ளனர் என்று போக்குவரத்துப் பிரதி அமைச்சர் ஜனிதருவன் கொடித்துவக்குத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
பயணிகள் கப்பல் சேவை 2023ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 14ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. தற்போது இரண்டு படகுகள் சேவையில் ஈடுபடுகின்றன. எனினும் இறங்குதுறை தொடர்பான பிரச்சினை உள்ளது. இந்தியா அதற்காக உதவத் தயாராக இருக்கின்றது. கப்பல் சேவை ஊடாக இந்த ஆண்டில் இதுவரை சுமார் 17 ஆயிரம் பேர் பயணித்துள்ளனர். 153 சேவைகள் நடைபெற்றுள்ளன. கடல் சீற்றக் காலத்தில் இந்தச் சேவை நிறுத்தப்படுகின்றது – என்றார்.