இலங்கை
இளைஞனுக்கு எமனாக மாறிய கொள்கலன் லொறி

இளைஞனுக்கு எமனாக மாறிய கொள்கலன் லொறி
சீதுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியின் கட்டுநாயக்க மீன் கடை சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நீர்கொழும்பில் இருந்து கொழும்பு திசை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று முன்னால் சென்ற லொறியை முந்திச்செல்ல முற்பட்ட போது, எதிர்திசையில் வந்த கொள்கலன் லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார்.
மரணித்தவர் 32 வயதுடைய வெலிமட பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
மரணித்தவரின் சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, கொள்கலன் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சீதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.