சினிமா
கணவருடன் இருக்கும் ரொமாண்டிக் போட்டோஸைப் பகிர்ந்த தான்யா! வாயைப் பிளந்து பார்த்த ரசிகர்கள்

கணவருடன் இருக்கும் ரொமாண்டிக் போட்டோஸைப் பகிர்ந்த தான்யா! வாயைப் பிளந்து பார்த்த ரசிகர்கள்
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ‘பலே வெள்ளையத்தேவா’ படத்தின் மூலமாக அறிமுகமான நடிகை தான்யா, அழகான மற்றும் பாரம்பரிய தோற்றத்துடன் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர்.’பிருந்தாவனம்’, ‘கருப்பன்’ உள்ளிட்ட படங்களிலும் தனது நடிப்பால் மக்கள் மனதில் இடம் பிடித்திருந்த தான்யா, சினிமாவிலிருந்து சில வருடங்களாகவே ஒதுங்கியிருந்தாலும், சமீபத்தில் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு இனிய நிகழ்வால் மீண்டும் மக்களின் கவனத்தை ஈர்த்தார்.தான்யா சமீபத்தில் புகைப்படக் கலைஞராகவும், ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றும் கௌதம் என்பவருடன் நிச்சயதார்த்தத்தில் இணைந்திருந்தார். இவர் தான், ‘பென்ஸ்’ திரைப்படத்தின் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியவர். இந்த நிச்சயதார்த்தம் குடும்பத்தினரின் சம்மதத்துடன், மிகுந்த ஆனந்தத்துடன், சீரான முறையில் நடைபெற்றதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன.அந்தவகையில் தற்பொழுது தான்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நிச்சயதார்த்த நிகழ்வின் போது தனது வருங்கால கணவருடன் எடுத்த ரொமாண்டிக் மற்றும் சென்டிமென்ட் நிறைந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி, வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.