இலங்கை
கத்திவெட்டு

கத்திவெட்டு
யாழ்ப்பாணம் சிறுப்பிட்டிப் பகுதியில், குடும்பத்தலைவர். ஒருவரை இலக்கு வைத்து நேற்று மாலை கத்தி வெட்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பத் தலைவர் ஒருவரே இடைமறிக்கப்பட்டு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காயமடைந்த நபர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். அச்சுவேலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.