Connect with us

இலங்கை

கருப்பு ஜூலை நினைவேந்தல் ; வடக்கு கிழக்கில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுப்பு

Published

on

Loading

கருப்பு ஜூலை நினைவேந்தல் ; வடக்கு கிழக்கில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுப்பு

கருப்பு ஜூலை கலவரத்தை நினைவுகூறும் வகையில் பொது நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றையதினம் வடக்கு கிழக்கு மாகாணங்களில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது.

அந்தவகையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இன்றையதினம் மாலை 5.00 மணியளவில் யாழ்ப்பாணம் முனியப்பர் கோவிலடியில் கருப்பு ஜூலை நினைவுதினம் அனுஸ்டிக்கப்பட்டது

Advertisement

ஈகைச் சுடரேற்றிய பின் அஞ்சலி நிகழ்வைத் தொடர்ந்து,

படுகொலை செய்யப்பட்ட உறவுகளது ஆத்தமாசாந்திக்காவும், இனப்படுகொலைக்கு சர்வதேச குற்றிவியல் விசாரணையை வலியுறுத்தியும் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது

ஈழத்தமிழர்கள் மீதான அரசின் இனப்டுகொலைக்கு நீதி வேண்டும்

Advertisement

போலி சகோதரத்துவ நாள் வேண்டாம் , உண்மை நீதி பொறுப்புக்கூறல் வேண்டும் போன்ற பதாதைகளை தாங்கியவாறு இந்த நினைவேந்தலில் கலந்துகொண்டவர்கள் கவனயீர்ப்பையும் முன்னெடுத்து இருந்தனர்

இதே வேளை திருகோணமலை நண்பர்கள் வட்டத்தின் ஏற்பாட்டில் திருகோணமலை கடற்கரையில் உள்ள வெளிக்கடை தியாகிகள் அரங்கில் கறுப்பு ஜூலை நினைவுதினம் அனுஸ்டிக்கப்பட்டது

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன