இலங்கை
கறுப்பு ஜுலை – இலங்கை வரலாற்றில் ஒரு சோகமான அத்தியாயம் : கனடாவின் புதிய பிரதமர்!

கறுப்பு ஜுலை – இலங்கை வரலாற்றில் ஒரு சோகமான அத்தியாயம் : கனடாவின் புதிய பிரதமர்!
கறுப்பு ஜூலை இலங்கையின் வரலாற்றில் ஒரு சோகமாக அத்தியாயமாகவே உள்ளது என கனடாவின் பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
கறுப்புஜூலையை குறிக்கும் விதத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
42 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான ஒரு இனப்படுகொலை வெடித்தது ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர், குடும்பங்கள் உடைந்தன, எண்ணற்றோர் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என சுட்டிக்காட்டிய அவர், இலங்கை வரலாற்றில் கருப்பு ஜூலை ஒரு சோகமான அத்தியாயமாகவே உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ்-கனடியர்களின் ஆதரவால் உந்தப்பட்டு 1983 ஆம் ஆண்டு துன்புறுத்தலில் இருந்து தப்பி ஓடும் 1800க்கும் மேற்பட்ட தமிழர்களை வரவேற்க கனடா ஒரு சிறப்பு நடவடிக்கை திட்டத்தை செயல்படுத்தியதையும் அவர் நினைவுக்கூர்ந்தார்.
மேலும் 2022 ஆம் ஆண்டில் கனடா நாடாளுமன்றம் மே 18 ஆம் திகதியை தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக ஒருமனதாக அறிவித்ததை கூறிய அவர், இது உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான நீடித்த அர்ப்பணிப்பாகும் எனவும் தெரிவித்தார்.
இந்தக் கொடுமைகளில் பாதிக்கப்பட்டவர்களையும் உயிர் பிழைத்தவர்களையும் நினைவு கூர்வதில் கனடா தமிழ்-கனடியர்களுடன் நிற்கிறது. இந்தப் நாளில் இழந்த உயிர்களை நாங்கள் போற்றுகிறோம் அர்த்தமுள்ள நீதி மற்றும் பொறுப்புக்கூறலுடன் கூடிய உலகைக் கட்டியெழுப்புவதற்கான எங்கள் பணியை உறுதிப்படுத்துகிறோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை