சினிமா
கறுப்பு மேகத்தினுள் மின்னும் நிலா போல் ஜொலிக்கும் கௌரி ஜி கிஷன்!வைரலாகும் லேட்டஸ்ட் லுக்!

கறுப்பு மேகத்தினுள் மின்னும் நிலா போல் ஜொலிக்கும் கௌரி ஜி கிஷன்!வைரலாகும் லேட்டஸ்ட் லுக்!
தமிழ் சினிமாவில் தன் மிரட்டலான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வரும் இளம் நடிகை கௌரி கிஷன், இன்று பலருக்கும் பரிச்சயமான பெயராக மாறியுள்ளார். பிரபல தெலுங்கு நடிகை வீணா கிஷனின் மகளாக பிறந்த கௌரி, மலையாளத்தில் வெளிவந்த மார்க்கம்களி என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா பயணத்தை தொடங்கினார்.தமிழ் ரசிகர்களின் மனதில் அவர் இடம்பிடித்தது, 2018-ல் வெளிவந்த விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் அமைந்த 96 திரைப்படத்தில் யங் ஜனு கதாபாத்திரம் வாயிலாகத்தான். இப்படத்தில் அவரது நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. அதன் பின்னர் பல திரைப்படங்களிலும் வெப் தொடர்களிலும் திறமையுடன் நடித்து வருகிறார்.இந்நிலையில், கறுப்பு நிற ஆடையில் எடுத்துக்கொண்ட புதிய புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. ஸ்டைலிஷ் உடை, செம்ம ஆக்ட்டிட்டூட் மற்றும் அழகான பார்வை ரசிகர்களின் இதயத்தை கொள்ளை கொள்ள வைத்துள்ளன. இளம் வயதிலேயே பல முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று, வித்தியாசமான கதைகளில் நடித்து வரும் கௌரி கிஷன், எதிர்காலத்தில் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகைகளில் ஒருவராக உயர்வது உறுதி!