இலங்கை
கழிவாக வீசப்படும் வாழைப்பழங்கள்!

கழிவாக வீசப்படும் வாழைப்பழங்கள்!
தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்தில் ஒவ்வொரு நாளும் 500 கிலோவுக்கும் மேற்பட்ட வாழைப்பழங்கள் விற்பனை ஆகாமல் குப்பையில் வீசப்படுவதாக நிலையத் தலைவர் சுனில் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
மஹவெலி ‘H’ மண்டலம், ராஜாங்கனை, எப்பாவெல, கட்டியாவ, நொச்சியகம போன்ற பகுதிகளில் இருந்து வாழைப்பழங்களை கொண்டுவரும் விவசாயிகள், சந்தை தேவை குறைவானதால் தங்களது அறுவடைகள் பெரிதும் வீணாகி வருவதால் மிகுந்த கவலையடைந்துள்ளனர்.
சந்தையில் தேவை இல்லாததால், மத்திய நிலையத்திற்கு கொண்டு வரப்படும் வாழைப்பழங்களில் பெரும்பகுதி விற்பனை ஆகாமல் கழிவாக வீசப்படுவதாகவும், இது விவசாயிகளுக்கு பெரும் நட்டத்தை ஏற்படுத்துவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்திற்கு தினசரி சுமார் 40,000 கிலோ வாழைப்பழங்கள் வருவதாக சுனில் சேனவிரத்ன கூறியுள்ளார்.
விலை வீழ்ச்சியால், அனைத்து வகையான வாழைப்பழங்களுக்கும் ஒரு கிலோக்கு ரூபா.30–35 மட்டுமே கிடைக்கிறது. இதனால் அறுவடை செய்யாமல் வயல்களில் பயிரையே அழிக்க நேரிடுகிறது என விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர்.