இலங்கை
கழிவுகள் வீசின் கடும் தண்டனை! நல்லூர்ப் பிரதேசசபை அறிவிப்பு

கழிவுகள் வீசின் கடும் தண்டனை! நல்லூர்ப் பிரதேசசபை அறிவிப்பு
நல்லூர்ப் பிரதேசசபைக்குட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் கழிவுகள் வீசுபவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை பிரயோகிக்கப்படும் என நல்லூர்ப் பிரதேசசபையின் தவிசாளர் பத்மநாதன் மயூரன் தெரிவித்துள்ளார்.
நல்லூர்ப் பிரதேசசபைக்குட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் கழிவுகள் வீசும் செயற்பாடுகளைக் கண்காணிப்பதற்காகக் கண்காணிப்புக் கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
சுகாதார விதிமுறைகளை மீறிச்செயற்படுவோருக்கு எதிராக 1987 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்கப் பிரதேசசபைச் சட்டத்தின் பிரகாரம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.